கோவை: கோவை மணியகாரம்பாளையம் குடியிருப்பு பகுதியில் உள்ளவர்களிடம் திருட்டு சம்பவங்களை குறைப்பதற்கு சிசிடிவி கேமரா பொருத்துவதன் அவசியத்தை உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை:
கோவை மணியகாரம்பாளையம் குடியிருப்பு பகுதியில் உள்ளவர்களிடம் திருட்டு சம்பவங்களை குறைப்பதற்கு சிசிடிவி கேமரா பொருத்துவதன் அவசியத்தை உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவையில் பல்வேறு இடங்களில் திட்டமிட்டு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவது, வீடுகளை நோட்டமிட்டு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவது, பெண்களிடம் செயினை பறித்துச் செல்வது என தொடர்ந்து சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இதைத் தடுப்பதற்கு கோவை மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து குடியிருப்பு பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து சிசிடிவி கேமரா பொருத்துவதன் அவசியத்தை விளக்கி திருட்டு நடப்பதற்கு முன்பாகவே அதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்து வருகின்றன.
இதேபோல், நேற்று மாலை கோவை மணியகாரம்பாளையம் பகுதி எம்.ஆர்.ஜி. நகர், நாலுகாவல் தோட்டம், சம்பத்து லே அவுட், துலுக்கன் தோட்டம், பாரதியார்ரோடு, 3 -வது வீதி ஆகிய பகுதிகளில் சரவணம்பட்டி உதவி ஆணையர் அருண் மற்றும் காவல் ஆய்வாளர் கந்தசாமி ஆகியோர் தலைமையில் சிசிடிவி கேமரா குறித்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசிய உதவி ஆணையர் கூறியதாவது:-
நீங்கள் பல லட்சங்கள் போட்டு வீடுகளைக் கட்டுகிறீர்கள். சிசிடிவி கேமரா ஒரு வீட்டிற்கு பொருத்துவதில் குறைந்த செலவே ஆகும். அதில் கவனம் செலுத்த நாம் மறுத்து விடுகிறோம். சிசிடிவி கேமரா இருப்பதால் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடக் கூடியவர்கள் முதலில் அந்தப் பகுதியை தேர்வு செய்வதை தவிப்பார்கள். போலீஸ் உடன் சேர்ந்து பொதுமக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும். அப்பொழுதுதான் திருட்டு சம்பவங்களை தடுக்க முடியும்.
கிராமப்புறங்களில் ஏதாவது ஒரு புதிய நபர் தெருக்களுக்கு வந்தால் உடனே அந்த பகுதியில் உள்ள பெரியவர்கள் தம்பி ஊருக்கு புதுசா இருக்கியே நீ யாருப்பா என விசாரிக்க தொடங்குவார்கள். கோவை போன்ற பெரு நகரங்களில் பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில் நம் தெருவுக்குள் வரக்கூடிய நபர்களை யாரும் கண்டு கொள்வது கிடையாது. புதிய நபர்கள் வந்தால் சந்தேகப்படும் படியாக தெருக்களுக்கு தென்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும், பெண்கள் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு செல்லும் பொழுது தன்னுடைய கணவருக்கு தன்னுடைய மகனுக்கு செல்போன் மூலமாக நீ மதியம் சாப்பிட வரும் பொழுது வீட்டுச் சாவியை சூ-க்கடியில் வைத்துள்ளேன் என கூறிவிட்டு அவர்கள் செல்வார்கள். அந்த பகுதியில் இருக்கக்கூடியவர்கள் அதை கவனித்து எளிமையான முறையில் சாவியை எடுத்து திறந்து திருடிச் சென்று விடுவார்கள். நாம் செய்யக்கூடிய ஒரு சில எதார்த்த சம்பவங்கள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.
அதனால், நாமும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என பல்வேறு விதமான விழிப்புணர்வு குறித்த ஆலோசனைகளை வழங்கினார். இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணம்பட்டி காவல் துறையைச் சேர்ந்த தலைமை காவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.