கோவை சூலூர் அருகே குக்கரில் சாராயம் காய்ச்சிய அதிமுக பிரமுகர் கைது - 150 லிட்டர் சாராயம் பறிமுதல்!

கோவை: கோவை சூலூர் அருகே குக்கரில் சாராயம் காய்ச்சிய அதிமுக பிரமுகரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 150 லிட்டர் சாராயம், அடுப்பு குக்கர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை சூலூர் அருகே குக்கரில் சாராயம் காய்ச்சிய அதிமுக பிரமுகரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 150 லிட்டர் சாராயம், அடுப்பு குக்கர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

சூலூர் அருகே சுல்தான்பேட்டை வதம்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (36) அதிமுக பேச்சாளராக உள்ளார். வீட்டில் கைத்தறி வைத்து தொழில் செய்து வந்த இவர், தற்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை காமநாயக்கன்பாளையம் எஸ்.ஐ சம்பத் பல்லடம் பொள்ளாச்சி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சுந்தரராஜ் அந்த வழியாக பைக்கில் வந்தார். அவரது வாகனத்தில் பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சுந்தர்ராஜனை நிறுத்தி விசாரித்தபோது, சுந்தர்ராஜ் பைக்கில் 6 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சுந்தர்ராஜ் சுல்தான் பேட்டையில் உள்ள தனது வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சியதை ஒப்புக் கொண்டார்.

இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் சுல்தான் பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ரவி தலைமையிலான போலீசார் சுந்தரராஜ் வீட்டுக்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது, அங்கு குக்கரில் சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது.

மேலும், வீட்டில் வைக்கப்பட்டிருந்த 150 லிட்டர் ஊரல் 4 லிட்டர் கள்ளச்சாராயம் சாராயம் தயாரிப்பதற்கான பொருட்களான சர்க்கரை, பேரீச்சம்பழம், படிகாரக்கல், அடுப்புக்கரி, உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சுந்தரராஜ் கைது செய்யப்பட்டார். வீட்டில் சாராயம் காய்ச்ச உதவியாக இருந்த அவரது தாயாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...