கோவை: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக மின்வாரியம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 6,400 கோடி விரைந்து வழங்கிட, முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகரித்துவரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட மின் உற்பத்தி திட்டங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தமிழகம் முழுவதும் காற்றாலைகள் மூலம் 9 ஆயிரத்து 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு உள்ளது. ஆண்டுதோறும் மே மாதம் கடைசியில் தொடங்கி செப்டம்பர் வரை காற்றாலை மின் உற்பத்தி சீசன் ஆகும். கடந்த ஆண்டு பத்தாயிரம் மில்லியன் யூனிட் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யபட்டது. இவ்வாண்டும் 10,000 மில்லியன் யூனிட்டுக்கு அதிகமாக மின் உற்பத்தி காற்றாலை மூலம் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் காற்றாலைகள் மூலம் அதிக மின் உற்பத்தி செய்யப்பட்டு வருவது ஒருபுறம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தாலும் மறுபுறம் காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு மின்வாரியம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை பல ஆயிரம் கோடி உள்ளது மிகவும் வேதனைக்குரியது.
இதுகுறித்து தமிழக காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சிலர் கூறுகையில், ‘‘ஆண்டுதோறும் தமிழகத்தில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்கேற்ப தமிழ்நாடு மின்வாரியம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை உரிய முறையில்(Evacuate) எடுத்துக்கொள்கிறது. ஆனால், பெறப்பட்ட மின்சாரத்துக்கு செலுத்த வேண்டிய தொகை கொடுப்பதில் மிகுந்த கால தாமதம் ஏற்படுகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக காற்றாலைகள் மூலம் பெறப்பட்ட மின்சாரத்துக்கு தமிழ்நாடு மின்வாரியம் ரூ. 6,400 கோடி செலுத்த வேண்டியுள்ளது. இதனால் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தினமும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 30% காற்றாலைகள் பங்களிப்பு செய்து வருகின்றன. எதிர்வரும் நாட்களில் இந்த பங்களிப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு கொண்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு நிலுவை வைக்கப்பட்டுள்ள தொகையை விரைந்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் இப்பிரச்சனையில் தலையிட்டு விரைவில் மின்வாரியம் நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே காற்றாலை மின் உற்பத்தியாளர்களின் எதிர்பார்ப்பாகும்'' என்று காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.