கோவை: கிணத்துக்கடவில் 3.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரை வாங்கி பணம் தராமல் ஏமாற்றிய இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியில் வசிப்பவர் அசோக்குமார்(60) இவருக்கு சொந்தமான இனோவா காரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொள்ளாச்சி நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், வேட்டைக்காரன் புதூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் ஆகியோருக்கு 3.75 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாக ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், செந்தில்குமார் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரும் கார் உரிமையாளர் அசோக்குமாரிடம் முன்பணமாக 50 ஆயிரம் பணம் கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை 15 நாட்களில் தருவதாகக் கூறி காரை எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது.
பதினைந்து நாட்கள் மேல் ஆகியும் காரை எடுத்துச் சென்றவர்கள் பணம் தராததால், இருவரையும் தொடர்பு கொண்டு கார் உரிமையாளர் அசோக்குமார் பணம் கேட்டு வந்துள்ளார். ஆனால், இருவரும் பணம் தராமல் அசோக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.
இதனால், காரைக் கொடுத்து ஏமாற்றமடைந்த அசோக்குமார் இன்று கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காரை வாங்கியதற்க்கான 3.25 லட்சம் ரூபாய் பணம் தராமல் ஏமாற்றியதாகவும், பணத்தை கேட்டவர் மீது கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி செந்தில்குமார் மற்றும் சக்திவேல் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.