உக்கடம் மேம்பால கட்டுமான பணிக்கு 85-வீடுகள் அகற்றம்!

கோவை: கோவை உக்கடம் ராமர் கோவில் அருகே உக்கடம் மேம்பாலப் பணிகளுக்காக 85 வீடுகளை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள்.


கோவை: கோவை உக்கடம் ராமர் கோவில் அருகே உக்கடம் மேம்பாலப் பணிகளுக்காக 85 வீடுகளை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள்.

கோவை உக்கடம்-ஆத்துபாலம் சாலை பொள்ளாச்சி செல்வதற்கும், வளையார் வழியாகக் கேரளா மாநிலம் செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ளது.

இச்சாலையில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் காரணமாகக் கடந்த 2018-ம் ஆண்டு உக்கடம்-ஆத்துபாலம் இடையே மேம்பாலம் கட்டும் பணி ஏப்ரல் மாதம் துவங்கியது.

இப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில் உக்கடம் பேருந்து நிலையம் அருகே இயங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே கரும்புக்கடை முதல் ஆத்துபாலம் வரை இரண்டாம் கட்ட மேம்பாலப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

உக்கடம்-ஆத்துபாலம் மேம்பாலத்தில் வாகன ஓட்டிகள் வசதிக்காகவும், மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் 3 இடங்களில் இயங்குதளங்கள் அமைக்கப்பட உள்ளது.

போத்தனூர் பிரிவு, ஆத்துபாலம், உக்கடம் பேருந்து நிலையம் ஆகிய மூன்று பகுதிகளில் யூ வடிவிலான ஏறுதளம் மற்றும் இயங்குதளங்கள் அமைக்கப்பட உள்ளன. பொள்ளாச்சியிலிருந்து வரும் வாகனங்கள் போத்தனூர் பிரிவு இறங்குதளத்தை பயன்படுத்தி டவுன்ஹால் செல்லலாம்.

உக்கடம் பேருந்து நிலையம் இறங்குதளம் மூலம் சுங்கம் பைபாஸ் செல்லலாம். ஆத்துபாலம் இறங்குதளம் மூலம் பாலக்காடு சாலை செல்லலாம். இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும், வாகன ஓட்டிகளும் பயன் அடைவார்கள்.

இந்நிலையில் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து பைபாஸ் சாலையில் இறங்கு தளம் அமைக்கும் பணிக்காக ராமர் கோவில் முன்புறம் உள்ள வீடுகளை அகற்ற ஏற்கனவே மாநகராட்சி சார்பாக உத்தரவிடப்பட்டது.



இந்த பணிகள் சில காரணங்களுக்காகத் தாமதம் ஆனது. இந்நிலையில் நெடுஞ்சாலைத் துறையினரும் மாநகராட்சி அதிகாரிகளும் ராமர் கோவில் அருகே உள்ள 85 வீடுகளை ஜே.சி.பி இயந்திரம் உதவியுடன் இடித்து அகற்றினார்கள்.



இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘உக்கடம் புல்லுக்காடு பகுதியில் இவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 492 வீடுகள் அகற்றப்பட வேண்டியுள்ளது. அதே சமயம் 106 பேருக்குப் புதிதாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...