பொள்ளாச்சி அரசு மருத்துவமனை விரிவாக்கம்... நகராட்சி இடத்தில் உள்ள தனியார் ஜவுளிக் கடையை அப்புறப்படுத்த அனைத்துக் கட்சியினர் கோரிக்கை..!

கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்வதற்காக, நகராட்சி இடத்தில் உள்ள தனியார் ஜவுளிக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என அனைத்துக் கட்சியினர் சார்பாக, பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்வதற்காக, நகராட்சி இடத்தில் உள்ள தனியார் ஜவுளிக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என அனைத்துக் கட்சியினர் சார்பாக, பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இதற்காக நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இடத்தை கையகப்படுத்தி தற்போது பிரமாண்ட கட்டடங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், மருத்துவமனை அருகே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தனியார் ஜவுளிக் கடை செயல்பட்டு வருகிறது.



அரசு மருத்துமனை விரிவாக்கப் பணிகளுக்காக நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வரும் அந்த தனியார் ஜவுளிக் கடையை அப்புறப்படுத்தி, அதில் மருத்துவமனை விரிவாக்கப் பணிகளை நடத்தக் கோரி, இன்று மதிமுக, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இதேபோல, பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள நாச்சிமுத்து பிரசவ விடுதிக்கு சொந்தமாக உள்ள இடத்தில், செயல்பட்டு வரும் இருசக்கர வாகன நிறுத்தும் இடத்தை அப்புறப்படுத்தி, மருத்துவமனை விரிவாக்கத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...