கோவை: சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வில் வெற்றி பெற்ற கோவையைச் சேர்ந்த காவலர்கள் 7 பேருக்கு, கோவை சரக டி.ஐ.ஜி. மற்றும் எஸ்.பி., பணி நியமன ஆணை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

தமிழக அரசு யூனிஃபார்ம் ரெக்ரூட்மெண்ட் போர்டு சார்பாக 2019-ஆம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான தேர்வு நடைபெற்றது. அதில் கோவையைச் சேர்ந்த காவலர்கள் கலந்து கொண்டு 7 பேர் வெற்றி பெற்றனர். அவர்களை பாராட்டி இன்று ஆயுதப்படை மைதானத்தில் மேற்கு மண்டல டி.ஐ.ஜி. முத்துசாமி மற்றும் கோவை மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டர்களாகத் தேர்வான குணா, சவுந்தரராஜன், ஆனந்த் குமார், பிரகாஷ், அனிதா, ராஜேஷ் கண்ணன், குமார் ஆகியோருக்கு பணி நியமன ஆணையை வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.