கோவையில் தொழில் நிறுவனங்கள் கணக்கு எடுப்பு சம்பந்தமாக தொழில் முனைவோர் சங்கம் ஆணையாளருக்கு கடிதம்..!

கோவை: முகாந்தரம்‌ இல்லாமல்‌ ஜிஎஸ்டி உள்ளிட்ட விவரங்கள்‌ கேட்பதால்‌ தொழில்‌ முனைவோர்களிடம்‌ ஒருவித அச்ச உணர்வுகள் ஏற்பட்டு வருகிறது.


கோவை: முகாந்தரம்‌ இல்லாமல்‌ ஜிஎஸ்டி உள்ளிட்ட விவரங்கள்‌ கேட்பதால்‌ தொழில்‌ முனைவோர்களிடம்‌ ஒருவித அச்ச உணர்வுகள் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து, கோவை ஆணையாளருக்கு தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தினர் கடிதம் அளித்துள்ளனர்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் J.ஜேம்ஸ், கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு அளித்துள்ள கடிதத்தில், ‘‘மாநகராட்சி பகுதிக்கு உட்பட்டு செயல்பட்டு வரும்‌ தொழில்கூடங்களின்‌ மாநகராட்சி ஊழியர்கள்‌ என்று சொல்லி மாநகரம்‌ முழுமையும்‌ தொழில்‌ முனைவோர்களிடம்‌ ஜிஎஸ்டி நம்பர் மற்றும்‌ தொழில்‌ விவரங்கள்‌ கேட்டு வருகிறார்கள்‌, எவ்விதமான முன்‌ அறிவிப்பும்‌ இல்லாமல்‌ வருகின்றவர்கள்‌

தங்களின்‌ வழிகாட்டல்‌படிதான்‌ வருகின்றார்களா... எதற்காக எவ்விதமான முகாந்தரம்‌ இல்லாமல்‌ ஜிஎஸ்டி உள்ளிட்ட விவரங்கள்‌ வருபவர்கள்‌ கேட்பதால்‌, தொழில்‌ முனைவோர்களிடம்‌ ஒருவித அச்ச உணாவுகளை ஏற்படுத்தி வருகிறது. எதற்காக இவாகள்‌ கேட்டு வருகிறார்கள்‌, வருகின்றவர்கள்‌ உண்மையான மாநகராட்சி ஊழியர்கள்தானா என்று பல்வேறு கேள்விகள்‌ தொழில்‌ முனைவோர்கள்‌, சங்க நிர்வாகிகளிடம்‌ கேட்டு வருகின்றார்கள்‌.

ஆகையால்‌, தங்களின்‌ ஆணைக்கு இணங்க இந்தக் கணக்கு எடுப்பு நடத்தப்படுகிறதா... வருகின்றவர்கள்‌ உண்மையான மாநகராட்சி ஊழியாகள்தானா என்ற அறிவிப்பு தாங்கள்‌ வெளியிட வேண்டுமாய்‌ கேட்டுக் கொள்வதுடன்‌, தொழில்கூடங்களில்‌ கணக்கு எடுப்பதாக இருந்தால்‌ தங்கள்‌ தொழில்‌ அமைப்புகளிடம்‌ கருத்துக் கேட்டு நடத்தினால்‌ தொழில்‌ முனைவோர்களிடம்‌ உள்ள அச்சம்‌ நீங்கும்‌ என்பதையும்‌ தங்களின்‌ மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறேன்‌. மேலும்‌, 1-1/2 ஆண்டுகள்‌ கொரோனா தொற்றில்‌ இருந்து தொழில்கள்‌ நலிந்த நிலையில்‌ செயல்பட்டு வருவதாலும்‌, இப்போதுதான்‌ தொழில்‌ நிலைகள்‌ சீராகி வருவதால்‌ இந்த சூழ்நிலைகள்‌ அனைத்தும்‌ தங்கள்‌ கருத்தில்‌ கொண்டு குறுந்தொழில்களுக்கு உதவிட முன்வர வேண்டுமாய்‌ தாழ்மையுடன்‌ கேட்டுக் கொள்கிறேன்‌'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...