கோவை: பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள, பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்ட அலுவலகத்தில் திருமூர்த்தி அணையிலிருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில், திருமூர்த்தி அணை பாசனம் மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்தநிலையில், திருமூர்த்தி அணையிலிருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து, ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள, பரம்பிக்குளம் -ஆழியாறு பாசன திட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. செயற்பொறியாளர் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், திருமூர்த்தி அணை பாசன சபை தலைவர்கள், திட்டக்குழு உறுப்பினர்கள் என பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருமூர்த்தி அணையில் இருந்து ஆகஸ்ட் 3ம் தேதி முதல் நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வரும் நிலையில், அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. எனவே, திருமூர்த்தி அணையிலிருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். மேலும், இந்த முறை 4ஆம் மன்டல பாசனத்திற்கு ஐந்து சுற்றுகள் வரை தண்ணீர் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணையில் இருந்து தண்ணீர் திறப்பதைத் தொடர்ந்து, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.