கோவை: கோவை 'சேவா பாரதி' அறக்கட்டளை சார்பில் கோவை மாவட்டம் சுற்றி உள்ள அனைத்து அறக்கட்டளை நண்பர்கள் அறிமுக விழா கோவை ஆர்.எஸ்.புரம் 'ஸ்ரீ சத்குரு சேவா' சங்கத்தில் நடைபெற்றது.
கோவை: கோவை 'சேவா பாரதி' அறக்கட்டளை சார்பில் கோவை மாவட்டம் சுற்றி உள்ள அனைத்து அறக்கட்டளை நண்பர்கள் அறிமுக விழா கோவை ஆர்.எஸ்.புரம் 'ஸ்ரீ சத்குரு சேவா' சங்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு 'சேவா பாரதி' இரத்ததான இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் மற்றும் சேவா பாரதி பொறுப்பாளர் விஜய ராமனின் அழைப்பின் பேரில் கோவை மாவட்ட சேவா பாரதி சார்பாகத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 10 தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 25 பேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில், பாரதி சமூக அறக்கட்டளையின்சார்பாக, பாரதி இரத்ததான இயக்கத்தின் தலைவர் வே.ரகுபதி மற்றும் பாரதி சமூக அறக்கட்டளை இணைச்செயலாளர் தங்கராஜ் கலந்துகொண்டு,பாரதி சமூக அறக்கட்டளை சார்பாக, நடத்தப்படும் இலவச உணவு சேவை, மற்றும் இரத்த தான இயக்க சேவைகள், பெண்களுக்கான சுகாதாரமான மாத விலக்கு, விழிப்புணர்வு முகாம், இலவச நாப்கின் வழங்கும் பூந்தளிர் திட்டம் பற்றி, விளக்கிக் கூறப்பட்டது.

கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்வது பற்றிப் பரிசீலிக்கப்பட்டது. மேலும், அறக்கட்டளை செயல்பாடுகளை மிகவும் பாராட்டுவதாகவும், பிற தொண்டு நிறுவனங்களும் இணைந்து இனிவரும் காலங்களில் சேவை செய்ய விரும்புவதாகவும், கலந்து கொண்ட தொண்டு நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.