கோவை: வால்பாறை புது மார்க்கெட் பகுதியில் பூட்டிக்கிடக்கும் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் மத்திய பகுதியில் அமைந்துள்ளது புது மார்க்கெட். இப்பகுதியில் சிறிய பெரிய என சுமார் 1,000 கடைகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் இந்த கழிவறையை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் இந்த கழிவறையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த கழிப்பறை நகராட்சியால் கட்டப்பட்டு குத்தகை அடிப்படையில் ஒப்பந்ததாரரால் பராமரிக்கப் பட்டு வந்தது. தற்போது சில மாதங்களாக இந்த கழிப்பறை பூட்டப்பட்டு கிடக்கிறது.
இதன் காரணமாக இப்பகுதியில் பணியாற்றும் தொழிலாளர்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். அதிகாலையில் வெளியூரிலிருந்து பேருந்தில் வரும் பயணிகள் கழிப்பறை வசதி இல்லாமல் பெரிதும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
எனவே, நகராட்சி நிர்வாகம் இந்த கழிப்பறையை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கழிப்பறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் அலுவலகம் அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது.