கோவையில் சளி, காய்ச்சல்‌, இருமல்‌ கண்டறியும்‌ பணிகளை மேற்கொள்ளும்‌ முன் களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள்‌ ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள்‌!

கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ரஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ,ப.,‌ இன்று 26.07.2021 நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.25 தேவாங்க மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்‌ கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும்‌ முன்களப்பணியாளார்களிடம்‌ ஆணையாளர்‌ தெரிவிக்கையில்‌,



முன்‌ களப்பணியாளர்கள்‌, வீடு வீடாகச்‌ சென்று பொதுமக்களுக்குச் சளி, காய்ச்சல்‌, இருமல்‌, மூச்சுத்திணறல்‌, உடல்‌ சோர்வு, உடல்‌ வெப்பநிலை பரிசோதனை, ஆக்சிஜன்‌ அளவு, ஆகிய பணிகளை மேற்கொண்டதில்‌, அதன்‌ விபரங்களை கோவிட்‌-19 கள ஆய்வு பதிவேடுகளில்‌ பதிவு செய்ததில்‌, சளி, காய்ச்சல்‌ உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில்‌ அவர்களுக்கு தொற்று (Positive) கண்டறியப்பட்டால்‌, உடனடியாக கொரோனா கட்டுப்பாட்டறை மற்றும்‌ சுகாதார அலுவலர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்‌.

பணி மேற்கொள்ளும்போது முகக்கவசம்‌ அணிந்து பணியாற்ற வேண்டும்‌, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும்‌, தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்‌ என தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்களில்‌ சிலர் தங்களுக்குச் சளி, காய்ச்சல்‌, இருமல்‌ அறிகுறிகள்‌ இருந்தும்‌ முன்களப்பணியாளா்களுக்கு தெரிவிக்காமலிருந்ததால்‌ அவர்களது வீட்டிற்கு அருகாமையில்‌ வசிப்பவர்களின்‌ மூலமாகத் தகவல்‌ பெறப்பட்டு, உடனடியாக சளி, காய்ச்சல்‌, இருமல்‌ உள்ளவர்களுக்குப் பரிசோதனை செய்ததில்‌ அவர்களுக்குத் தொற்று உறுதியானது (Positive) கண்டறியப்பட்டதால்‌ அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆகவே, பொதுமக்கள்‌ முன்களப்பணியாளா்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்‌. அரசின்‌ வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து, கொரோனா தொற்று இல்லாத மாநகராட்சியாகத் திகழ முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமெனத் தெரிவித்தார்‌.

முன் களப்பணியாளர்கள்‌ பொதுமக்களிடம்‌ கொசுவினால்‌ ஏற்படும்‌ நோய்களைத் தவிர்ப்பதற்காக வீடுகளில்‌ கொசு உற்பத்தி ஏற்படாமல்‌ இருக்க வீட்டில்‌ தேவையற்ற பொருட்கள்‌ இருந்தால்‌ அவற்றை அகற்றப்பட வேண்டும்‌ எனத் தெரிவிக்க வேண்டும்‌.

வீட்டில்‌ உள்ள தண்ணீர்‌ தொட்டிகளைக் கொசுக்கள்‌ மற்றும்‌ கொசுப்புழு புகாவண்ணம்‌ மூடி வைக்க வேண்டும்‌. கொசுவினால்‌ ஏற்படும்‌ நோய்களைக்‌ குறித்து பொதுமக்களிடம்‌ விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டும்‌ எனத் தெரிவித்தார்கள்‌.



அதனைத்‌ தொடர்ந்து, மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.51, டாடாபாத்‌ 11வது வீதியில்‌ அமைக்கப்பட்டுள்ள தார்ச்‌ சாலையின்‌ தரத்தினை குறித்து ஆய்வு செய்த பின்னர், வார்டு எண்‌.51, ராம் நகர்‌, பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா பூங்காவினை ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌, ஒப்பந்த அடிப்படையில்‌ பூங்காவினை மேற்கொள்பவர்களிடம்‌ பூங்காவிற்குள்‌ நடைபாதைக்கு வருபவர்களை நுழைவுவாயிலில்‌ வெப்பமானியைக் கொண்டு உடல்‌ வெப்பநிலையைக் கண்டறிய வேண்டும்‌.

கிருமிநாசினி மூலம்‌ கைகளைச் சுத்தப்படுத்திட நுழைவுவாயிலில்‌ கிருமிநாசினி வைத்திட வேண்டும்‌. பதிவேடுகளில்‌ அவர்களது பெயர்களைக் குறிப்பிட வேண்டும்‌.



பூங்காவின்‌ உட்பகுதி மற்றும்‌ சுற்றுப்புறத்தினை குப்பைகள்‌ இல்லாமல்‌ தூய்மையாக வைத்திருக்க வேண்டும்‌ எனச் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம்‌ தெரிவித்த பின்னர்‌, வார்டு எண்‌.51க்குட்பட்ட ராம்‌ நகர்‌, சொர்னாம்பிகா மனைப்பிரிவு பகுதியில்‌ பொதுக்‌ கழிப்பிடத்தில்‌ சுகாதாரம்‌ குறித்து ஆய்வு செய்தார்கள்‌.

இந்த ஆய்வின்போது, மத்திய மண்டல உதவி ஆணையர்‌ சிவசுப்பிரமணியம்‌, நகரமைப்பு அலுவலர்‌ (மத்தியம்‌) ரவிச்சந்திரன்‌, உதவி செயற்பொறியாளர்‌ கருப்புசாமி, மண்டல சுகாதார அலுவலர்‌ திருமால்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடன்‌ இருந்தனர்‌.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...