கோவை திமுக பிரமுகர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார்..!

கோவை: கோவை திமுக பிரமுகரான ரேஸ்கோர்ஸ் ரகுநாத் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார்.


கோவை: கோவை திமுக பிரமுகரான ரேஸ்கோர்ஸ் ரகுநாத் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார்.

திமுக பிரமுகர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்துள்ள புகாரில், ‘‘நான்‌ மேற்கண்ட விலாசத்தில்‌ வசித்து வருகிறேன்‌. திரைப்பட தயாரிப்பாளராகவும்‌, இயக்குநராகவும்‌ தொழிலில்‌ ஈடுபட்டுள்ளேன்‌. கோவை மாநகர்‌ மற்றும்‌ புறநகர்‌ மாவட்ட பகுதிகளில்‌ கடந்த அதிமுக ஆட்சியில்‌ பல்வேறு முறைகேடுகள்‌ லஞ்ச லாவண்யங்கள்‌ நடைபெற்று பொதுமக்களின்‌ வரிப்பணத்தை லட்சக்கணக்காகவும்‌, கோடிகளை தாண்டியும்‌ மாஜி மந்திரி வேலுமணி மற்றும்‌ ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்கள்‌ மோசடி செய்து விட்டனர்‌. இதுகுறித்து அனைத்து ஊடகங்களும்‌ பிரசுரம்‌ செய்து வருவது தாங்களும்‌ அறிந்திருப்பீர்கள்‌!

கோவை மாநகரில்‌ ரூபாய்‌ 1500கோடி அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்கு, தற்போது 225 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள்‌ தொடங்கப்பட்டதாகவும்‌, பில்லூர்‌ 3ஆம்‌ அபிவிருத்தி திட்டம்‌ சுரங்கப்பாதை அமைக்கும்‌ திட்டத்திற்கு ரூ. 116கோடி ஒதுக்கப்பட்டு பணிகள்‌ நடைபெற்று வருவதாகவும்‌ கூறி நொய்யல்‌ ஆற்றை மீட்டெடுக்கும்‌ திட்டத்திற்கு 230 கோடி என கோவை மாநகருக்கு 24X7 குடிநீர் திட்டம்‌ 550 கோடி எனவும்‌, குனியமுத்தூர்‌ பாதாள சாக்கடைத்திட்டம்‌ 195 கோடி, ஆத்துப்பாலம்‌, உக்கடம்‌ மேம்பாலப் பணிகள்‌ 215.51 கோடி என கோவை ரேஸ்கோர்ஸ்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ ஆரம்பத்தில்‌ 40 கோடி ஒதுக்கீடு செய்து பிறகு அதைவிட தொகையை அதிகமாக்கியும்‌, ஆர்‌.எஸ்‌.புரம்‌ திட்டத்திற்கு நிதி அதிகமாக ஒதுக்கீடு செய்து அதிலும்‌ பணிகள்‌ முழுமையாக முடியாமலும்‌ அதன்‌ பிறகு (9 குளங்கள்‌) தூர்வாரவும்‌, அழகுப்படுத்தவும்‌ கோடிக்கான தொகையை ஒதுக்கி அந்தப்பணிகளில்‌ பல கோடி ரூபாய்‌ அளவுக்கு ஊழல்‌ செய்தும்‌, குடிசைமாற்று வாரிய வீடுகள்‌ சூயஸ்‌

வாட்டர்‌ திட்டம்‌ வெள்ளலூர்‌ பஸ்‌ நிலையம்‌ அமைப்பதில்‌ ஊழல்‌, தொண்டாமுத்தூர்‌ பகுதியில்‌ ஏற்படுத்தப்பட்ட சாலை, சாக்கடை மற்றும்‌ கடந்த ஆட்சிக் காலத்தில்‌ கோவை மாநகரில்‌ நடைபெற்ற அனைத்து மாநகராட்சி எல்லா பணிகளுக்கும்‌ 12% கமிஷனாக பெறுவதை வாடிக்கையாக வைத்து இருந்தார்‌.

அதிகப்படியாக கொள்ளையடித்த மாஜி அமைச்சர்‌, எஸ்‌.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறையின்‌ கீழ்‌ நடவடிக்கை எடுத்து பொதுமக்களின்‌ வரிப்பணத்திலிருந்து கொள்ளையடித்து மக்களை வஞ்சித்த இவர்‌ மீது சட்டப்படியும்‌, தங்களின்‌ மேலான பார்வையிலும்‌ நடவடிக்கை எடுத்து மக்களுக்கு உரிய நியாயம்‌ வழங்கவும்‌ பணிவன்புடனும்‌, வணக்கத்துடனும்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.'' தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...