மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை கண்டித்து கோவையில் விவசாயிகள் ஏர்கலப்பைகளுடன் ஆர்பாட்டம்!

கோவை: காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை கண்டித்து கோவையில் விவசாயிகள் ஏர்கலப்பைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை கண்டித்து கோவையில் விவசாயிகள் ஏர்கலப்பைகளுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக அரசு காவிரியாற்றின் குறுக்கே ரூ.9000 கோடி மதிப்பில் மேகதாது பகுதியில் அணைகட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதரத்தையும் தமிழக உரிமையை பறிக்கும் விதமாக செயல்படும் கர்நாடக அரசை கண்டித்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், விவசாயிகள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடக அரசு அணைகட்டுவதற்கான ஆயத்த பணிகளை துவங்கியுள்ளதை கண்டித்தும், இதனை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்தும் தமிழக விவசாயிகள் இன்று தமிழகம் முழுவதும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இதன் ஒரு பகுதியாக, கோவையில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் ஏர்கலப்பைகளுடன் மத்திய மற்றும் கர்நாடக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.



மேலும், தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும், வாழ்வாதாரத்தை பறிக்கும் விதமாக கர்நாடக அரசு செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய விவசாயிகள், மத்திய அரசு மேகதாது விவகாரத்தில் தலையிட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர். மேகதாது அணை விவகாரம் தமிழக விவசாயிகளை கொதிப்படைய செய்துள்ள நிலையில் அணை கட்டுவதை கர்நாடக அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...