உயிர் பலி வாங்கும் மேம்பாலம்: பொதுமக்கள் பீதி.. பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க கோரி சார் ஆட்சியரிடம் மனு!

கோவை: பொள்ளாச்சி சங்கம் பாளையம் காலனியில், உள்ள மேம்பாலத்தில் விபத்தால் அடிக்கடி ஏற்படும் உயிர்ப் பலியால், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: பொள்ளாச்சி சங்கம் பாளையம் காலனியில், உள்ள மேம்பாலத்தில் விபத்தால் அடிக்கடி ஏற்படும் உயிர்ப் பலியால், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பொள்ளாச்சியை அடுத்த ஆட்சி பட்டி ஊராட்சியில் சங்கம் பாளையம் - நடுப்புணி சாலையிலுள்ள மேம்பாலம் கடந்த 5-ஆண்டுகளுக்குமுன்பு கட்டி முடிக்கப்பட்டது.



ஆனால், மேம்பாலத்தில் தடுப்புச் சுவர், ஒளிர் விளக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றனர்.



மேம்பாலத்திலிருந்து 50-அடிக்குக் கீழே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து பலர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், இன்று அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவிடம்மனு அளித்தனர்.

மேம்பாலத்தில் தடுப்புச் சுவர், மின் விளக்குகள், உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாததால் தொடர்ந்து இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து உயிர்ச் சேதங்கள் ஏற்படுவதோடு வாகனங்கள் குடியிருப்புகள் மீது விழுகின்றன.

இதனால் அப்பகுதியில் குடியிருக்கவே அச்சமாக உள்ளது. எனவே மேம்பாலத்தில் விபத்துகள் ஏற்படாதவாறு பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...