கோவை: கோவை கிணத்துக்கடவில் டோக்கன் கிடைக்காததால் கொரோனா தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டாரத்தில் மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று தாமரைகுளம், காரசேரி, தேவரடிபாளையம், கோவிந்தாபுரம் ஆகிய நான்கு இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
தடுப்பூசி முகாம் குறித்து முறையாக தகவல் கிடைக்காததால் மக்கள் முகாம்களில் அதிகளவில் கூடி காத்திருக்கின்றனர். ஆனால், ஒரு முகாமிற்கு 250 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படுவதால் மீதமுள்ளவர்கள் டோக்கன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
எனவே, கூடுதலாக கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.