கோவை: பல்லடம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள திமுக சுவரொட்டியில் இறையன்பு படம் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்: பல்லடம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள திமுக சுவரொட்டியில் இறையன்பு படம் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பேருந்து நிலையம், கோவில் சுவர்கள், காவல்துறையின் தடுப்பு கம்பிகள் போன்ற அனைத்து இடங்களிலும் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் அரசு தலைமை செயலர் இறையன்பு படம் இடம்பெற்று இருக்கும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் தலைமை செயலர் இறையன்பு ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திமுகவினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அந்த சுவரொட்டியில் உதயநிதி, அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்டோரின் படங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில், இந்த சுவரொட்டிகளை கண்ட பொதுமக்கள் கூறுகையில் அரசு அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்தவே அதிகாரிகள் உள்ளனர். கட்சி வேறு அரசு வேறு இதுபோன்ற திமுகவினரின் சுவரொட்டிகள் அதிகாரிகள் மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் குறைந்துவிடும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
கட்சி சம்பந்தப்பட்ட சுவரொட்டியில் தலைமை செயலாளர் இறையன்பு அவர்களின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.