கோவை: வால்பாறையில் உள்ள சோலையார் அணை நிரம்பியதை அடுத்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து சோலையார் அணை நிரம்பியது. கொரோனா தொற்று பரவல் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து இருந்த காரணத்தால் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு சில தினங்களுக்கு முன் மீண்டும் பொது போக்குவரத்தை துவங்கியது. சுற்றுலா இடங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் செல்ல அரசு அனுமதி வழங்கியதை அடுத்து, வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வர துவங்கினர்.

இந்த நிலையில், சோலையார் அணை நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதை அறிந்து பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் சோலையார் அணை பகுதிக்கு வந்து அணையை கண்டு மகிழ்ந்தனர்.
மேலும், ஆபத்தை உணராமல் ஆர்ப்பரித்து வரும் தண்ணீர் முன் நின்று குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து வருகின்றனர். காவல் துறையினர் பாதுகாப்பு அளிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.