வால்பாறையில் கொட்டி தீர்த்த கனமழை - மக்களின் இயல்பு வாழக்கை பாதிப்பு!

கோவை: வால்பாறையில் சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது.


கோவை: வால்பாறையில் சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை, காஞ்சமலை, வெள்ளைமலை, அக்கமலை, பச்சமலை, உருளிகள், சின்னக்கல்லார் போன்ற எஸ்டேட் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

இன்று வாரச் சந்தை நாள் என்பதால் பொது மக்கள் கொட்டும் மழையில் காய்கறி பொருட்களை வாங்கி சென்றனர். மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.



வால்பாறை சோலையார் அணை நிலவரம் மற்றும் மழை அளவுகள்:-

சோலையார் அணை

நீர்மட்டம்: 165 க்கு 163 - அடியாக உயர்ந்துள்ளது.

நீர்இருப்பு: 5.59 டி.எம்.சியாக உள்ளது.

நீர் வரத்து: வினாடிக்கு 6622-கன அடியாக உள்ளது.

வெளியேற்றம்: வினாடிக்கு 6655 - கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழை அளவு

வால்பாறை: 29 மில்லி மீட்டர்

சோலையார் அணை: 93 மீல்லி மீட்டர்

சின்னக்கல்லார்: 68 மீல்லி மீட்டர்

நீரார் அணை: 73 மீல்லி மீட்டர் மழையும் பதிவானது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...