கோவை: வால்பாறையில் வனத்துறையினர் அமைத்திருந்த பாதுகாப்பு கதவுகளை உடைத்து, சுற்றுலா பயணிகள் உள்ளே சென்றனர். இதுதொடர்பாக வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறைக்கு தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் பல மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வால்பாறைக்கு வருகிறார்கள். வால்பாறை செல்லும் வழியில் உள்ள9வது கொண்டை ஊசி வளைவில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆழியார் அணையை கண்டு ரசிக்கின்றனர், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக, வனத்துறையினர் கொரோனா பெருந்தொற்று காரணமாக சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கவில்லை. தமிழக அரசு சில தளர்வுகள் அறிவித்ததைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில், 9வது கொண்டை ஊசி வளைவில் கண்டுகளிக்க வந்த சுற்றுலா பயணிகள் வனத்துறை அமைத்திருந்த பாதுகாப்பு கதவுகளை உடைத்து உள்ளே சென்றது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வனத்துறையினர் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடும் சுற்றுலா பயணிகளுக்கு கடும் தண்டனையும், அபராதமும் விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.