கோவை: கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் லாவகமாக செல்போன் திருடும் சிறுவனின், சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே, விடுமுறை நாள் என்பதால் ஞாயிற்றுக் கிழமை நாட்களில் மீன் மார்கெட்டில் அசைவ பிரியர்களின் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் கோவை உக்கடம் மீன் மார்கெட்டில் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியது.
இந்நிலையில் மீன் வாங்குவதாக வந்த சிறுவன் ஒருவன் சக வாடிக்கையாளரிடம் செல்போனை லாவகமாகத் திருடியுள்ளான். மீன் வாங்க வந்த சிறுவன் பையை வைத்து மறைத்து அலைபேசி உரிமையாளருக்கே தெரியாமல் திருடிய சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீன் மார்கெட் மட்டுமின்றி காய்கறி மார்கெட்டிலும் இதேபோன்று பல செல்போன்கள் திருடு போயுள்ளது. சிறுவன் மீன் மார்கெட்டில் நடத்திய கைவரிசையினை காய்கறி மார்கெட்டிலும் காட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மீன் மார்கெட்டில் தொலைபேசி களவாடிய காட்சிகளைக் கொண்டு சிறுவனை வலைவீசித் தேடி வருகின்றனர்.