கோவை: வால்பாறை பகுதியில் சார் ஆட்சியர் மற்றும் பயிற்சி ஆட்சியர் ஆய்வு செய்தனர்.
கோவை: வால்பாறை பகுதியில் கனமழை பாதிப்புகள் சார் ஆட்சியர் மற்றும் பயிற்சி ஆட்சியர் ஆய்வு செய்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை இரண்டு நாளாக தீவிரமடைந்து வாழைத்தோட்டம் ஆறு, கூழாங்கல் ஆறு மற்றும் வால்பாறை பகுதியில் உள்ள சின்னக்கல்லார் அணை, நீரார் அணை ஆகியவற்றில் தண்ணீர் நிரம்பி சோலையாறு அணை நீர் மட்டம் உயர்ந்துமுழுமை அடைந்தது.
மழையின் காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மழையால் பாதிப்புகள் உள்ளனவா என்றும் இயற்கை பேரிடர் காலங்களில் மக்களைப் பாதுகாப்பது குறித்துபொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் நான்தேவு ராவ் மற்றும் பயிற்சி ஆட்சியாளர் சரண்யா அவர்கள் ஆய்வு செய்தனர்.
வால்பாறை உள்ள அரசுமருத்துவமனை மற்றும் பிரசவ மருத்துவமனையும் ஆய்வு செய்து அங்குள்ள தேவைகளை கேட்டு அறிந்தனர். மருத்துவமனைக்கு இரத்த வங்கி, ஆப்ரேஷன் தியேட்டர்உள்ள மருத்துவர்கள் ரேடியாலஜிஸ்ட் மருத்துவமனைக்கு சமையாளர்கள் சுகாதார ஊழியர்கள் இரவு காவலர்கள் மருத்துவமனையில் பற்றாக்குறை இருப்பதால் நோயாளிகள் சிரமப்படுவதாகவும் தெரிவித்தனர்.
பின்பு வாழைத்தோட்டம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க வால்பாறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தயார்நிலை உள்ளதையும், அங்கு கழிவறை தண்ணீர் வசதி மின்சார வசதி போன்றவைகள் உள்ளதா என்று பள்ளி வளாகத்தை பார்வையிட்டனர்.
வால்பாறை அரசு பேருந்துபணி மனை பகுதியில்,ஒவ்வொரு வருடமும் வாழைத்தோட்ட ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேருந்து பணிமனை பகுதியில் தண்ணீர் நுழைந்து விடும் அப்பகுதிக்கு வெள்ளப் பெருக்கைத் தடுக்க நடவடிக்கையை ஆய்வு செய்தனர்.

வால்பாறை அருகே அனலி எஸ்டேட் பகுதிக்குச் செல்லும்வழியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டால் தரைப்பாலத்தில் தண்ணீர் நிரம்பி விடும் பொது மக்கள் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும் என்பதையும்ஆய்வு செய்தனர்.
பின் சோலையார் அணை நேற்று அதன் முழு கொள்ளளவு தண்ணீர் நிரம்பி தண்ணீர் மதகு வழியாக வெளியேற்றினர். அப்பகுதியைச் சென்று அணையைப் பார்வையிட்டனர். வால்பாறை வாட்டச்சியர் ராஜன் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி விஜய் அமுர்தராஜ் ஆகியோர்கள் ஆய்விலிருந்தனர்.