கோவை: கோவை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உறுதி கூறியுள்ளார்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.

மாவட்டம் முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கையாக 'விழித்திரு' என்ற தலைப்பில் கிராமங்கள் தோறும் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிபட்டியில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமில் சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.
பின்னர், செய்தியாளர்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அளித்த பேட்டியின்போது, 'ஊரடங்கு காலத்தில் பெண் குழந்தைகள் வீட்டில் தனியாக இருப்பதால் குழந்தைகள் பாதுகாப்புடன் இருக்க பெற்றோர்களின் கண்காணிப்பு அவசியம்.

மேலும், கோவை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இரண்டு மாத காலத்திற்குள் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் பொதுமக்களை சந்தித்து பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்' என்று தெரிவித்தார்.