வால்பாறையில் தேயிலைத் தோட்டங்களை வெள்ள நீர் சூழ்ந்தது..!

கோவை: தென் மேற்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருவதைத் தொடர்ந்து, வால்பாறையில் தேயிலைத் தோட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், தேயிலைத் தோட்டப் பணிகள் பாதிப்படைந்துள்ளது.


கோவை: தென் மேற்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருவதைத் தொடர்ந்து, வால்பாறையில் தேயிலைத் தோட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், தேயிலைத் தோட்டப் பணிகள் பாதிப்படைந்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சோலையாறு அணை 163 அடி உயரத்தைத் தாண்டியது. வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென் மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, சோலையார் அணை நீர்ப்பிடிப்புப் பகுதியான சின்னக்கல்லார் மற்றும் நீரார் அணை பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இப்பகுதியில் பெய்யும் மழைநீர் அனைத்தும் கூழாங்கல் ஆற்றின் வழியாக சோலையார் அணைக்குச் செல்கிறது.



கூழாங்கல் ஆற்றில் இன்றைய காலை 6 மணி நிலவரப்படி 6,000 கனஅடி நீர் சோலையார் அணைக்குச் சென்று கொண்டுள்ளது. 165 அடி உயரமுள்ள சோலையார் அணையில் தற்பொழுது 163 அடி நீர் உள்ளது. சேடல் வழியாக 5,000 கன அடி நீர் வெளியேறி வருகிறது. 790 கனஅடி நீர் மின் உற்பத்திக்காக செல்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி சட்டர் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதன் காரணமாக உருளிக்கல் பகுதியிலுள்ள தேயிலைத் தோட்ட பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தேயிலைத் தோட்டப்பணிகள் பாதிப்படைந்துள்ளன. பொதுப்பணித் துறையினர் அணையை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...