திருப்பூர்: திருப்பூரில் வாகன தணிக்கையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் இருந்த எஸ்.ஐ., மற்றும் கண்காணிக்கத் தவறிய இன்ஸ்பெக்டரை திருப்பூர் கமிஷனர் வனிதா 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

திருப்பூர் சென்ட்ரல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த மாதம், 25-ஆம் தேதி நள்ளிரவு போலீஸ் எஸ்.ஐ., பாண்டித்துரை தலைமையிலான போலீஸார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அவ்வழியாக சென்ற, நான்கு வடமாநிலத்தினரின் டூவீலரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம், ஐந்து கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சாவை மட்டும் பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குப்பதியாமல் அனுப்பி விட்டனர்.
அதேபோல், சென்ட்ரல் போலீஸ் பகுதியில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்று வந்த திருநெல்வேலியைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவர், சென்னை ஹைகோர்ட்டில் முன் ஜாமின் கேட்டு சமீபத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்றிருந்தார். இதுதொடர்பான, தகவலை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், உயரதிகாரிகளுக்கு தகவல் அளிக்கவில்லை. இச்சூழலில், கஞ்சா சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யாமல் தவறிய எஸ்.ஐ., பாண்டித்துரை மற்றும் இரு சம்பவங்களில் முறையாக கண்காணித்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளிக்காமல் விட்ட இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் ஆகியோரை திருப்பூர் போலீஸ் கமிஷனர் வனிதா 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார். மேலும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் சமீபத்தில், வடக்கு ஸ்டேஷனக்கு (குற்றப்பிரிவு) மாற்றப்பட்டு, பின் மத்திய மண்டலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.