கோவை: வால்பாறை பகுதியில் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் அதிரப்பள்ளி சாலை மழையால் சேதம் அடைந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்குட்பட்ட சாலக்குடி என்ற பகுதிக்கு மளுக்கப்பாறையிலிருந்து பத்தடிப்பாலம் என்ற இடத்திற்கு அருகே உள்ள நீர்வீழ்ச்சிக்கு முன்பு உள்ள பாலம் நேற்று பெய்த கனத்த மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அவ்வழியாகச் செல்லும் ஆட்டோவைத் தவிர, பிற கனரக வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் போக்குவரத்தை விரைவில் சீர்செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.