வால்பாறையில் கணிதத்தை எளிமையாக கற்று தந்து 100க்கும் மேல் விருதுகளை வாங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்!

கோவை: வால்பாறையில் கணிதத்தை எளிமையாக கற்றுக்கொடுத்து 100க்கும் மேல் விருதுகளை அரசுப் பள்ளி ஆசிரியர் வாங்கியுள்ளார்.



கோவை: வால்பாறையில் கணிதத்தை எளிமையாக கற்றுக்கொடுத்து 100க்கும் மேல் விருதுகளை அரசு பள்ளி ஆசிரியர் வாங்கியுள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அமைந்துள்ள உருளிகள் எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் மட்டுமே இந்த பள்ளியில் படித்து வருகிறார்கள். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 82 மாணவர்கள் இங்கு படித்து வருகிறார்கள்.

இங்கு பட்டதாரி ஆசிரியர்கள் மூன்று நபர்கள் கற்பித்து வருகிறார்கள். இதில் 23 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் இருக்கும் வசந்தகுமார் கடந்த 7 ஆண்டுகளாக இந்த பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பொதுவாக பள்ளி குழந்தைகள் மற்ற அனைத்து ஆசிரியர்களுடனும் நன்றாக பழகுவார்கள்.



ஆனால் கணித ஆசிரியரிடம் பயத்தில் ஆசிரியரை புறக்கணித்து இருப்பார்கள் இதை மாற்ற விரும்பியும், பள்ளி குழந்தைகள் கணிதத்தை கற்றால் தான் வாழ்க்கை சிறக்கும் என்று எண்ணி மாணவர்களுக்கு எளிய முறையில் கணிதத்தை எளிமையாக்கி கற்றுத் தருகிறார்.



மேலும் எளிய உபகரணங்களை தயாரித்து கணிதத்தைச் சொல்லி தருகிறார். எளிமையான துணைக்கருவிகள் செய்து அதன் மூலமாக கணிதத்தை கற்றுத்தருகிறார். சினிமா பாடல்களின் மெட்டில் கணிதத்தை கற்றுத் தருகிறார்.



இன்றைக்கு கணித வகுப்பில் ஆசிரியர் என்ன சொல்லித் தரப் போகிறார் என்ற ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் கற்றலை மாணவர்களுக்கு புரிய செய்து உள்ளார். தனது கற்பித்தல் முறையை வீடியோ வடிவில் இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

தேசிய திறனறிவுத் தகுதி தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகுப்புகளை நடத்தி வருகிறார். இந்த குழந்தைகள் சமூக ரீதியாக பின்தங்கிய சூழலில் இருக்கிறார்கள். ஏதேனும் ஒரு வழியை ஏற்படுத்தி கொடுத்தால் முன்னேறிக் கொள்வார்கள். அந்த வகையில்தான் தேசிய திறனறிவுத் தகுதி தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தி வருகிறேன்.

இதுவரை, எங்கள் பள்ளியில் இருந்து மூன்று பேர் இந்த திறனறிவு தேர்வில் வெற்றி பெற்றார்கள். இவர்கள் கல்லூரி படிப்பு முடியும் வரை அரசு வழங்கும் 500 ரூபாய் காலர்சிப் பெற்று வருவார்கள். இது மற்ற குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. பிற பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கும் நான் வழி காட்டுகிறேன்.



இதனை அங்கீகரித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பாராட்டு கடிதம் அனுப்பி இருக்கிறது என்கிறார். என்னுடைய முயற்சிகளுக்கு மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதுவே என்னை ஊக்கப் படுத்துகிறது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கணிதத்தையே எளிமையாக்கி தரும் வகையில் தமிழில் நூல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்த நூல் கணிதத்தை மேலும் பல குழந்தைகளிடம் கொண்டு போய் சேர்க்கும் என்கிறார் கணித ஆசிரியர் வசந்த குமார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...