கோவை: நாள்தோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதால் பெண் பிள்ளைகளைப் பெற்றோர்கள் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என கிணத்துக்கடவு போலீஸார் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால் பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் பெற்றோர்கள் மற்றும் பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கோவை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரண்டு பெண் காவலர்களை நியமித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதன்படி கிணத்துக்கடவு காவல்துறையினர் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள சமுதாயக் கூடத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கிணத்துக்கடவு காவல் நிலைய பெண் தலைமைக் காவலர் கவிதா, சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர், சமூக ஆர்வலர் சக்தி சரண்யா, காவலர் பவதாரணி ஆகியோர் கலந்துகொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் பெண் குழந்தைகளைக் கண்காணித்து வளர்க்க வேண்டும் என்றும், பாலியல் ரீதியாகவோ, வரதட்சனை ரீதியாகவோ பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக 181 மற்றும் 10 9 8 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.