கோவை: கோவையில் இருந்து கேரளாவிற்கு மூன்றரை டன் ரேஷன் அரிசி கடத்திய வாகனத்தை குடிமைப் பொருள் அதிகாரிகள் சோதனையின்போது மடக்கிப்பிடித்தனர். வாகனத்தில் இருந்த ரேஷன் அரிசி கடத்திய இரண்டு கேரள வாலிபர்களை கைது செய்தனர்.

கோவை, பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கேரள பதிவு எண் கொண்ட சரக்கு லாரி ஒன்று வந்தது. அதை போலீஸார் நிறுத்த முயன்றனர். ஆனால், அந்த லாரி நிற்காமல் சென்றது. உடனே போலீஸார் அந்த லாரியைத் துரத்திச் சென்று மடக்கிப்பிடித்தனர்.
தொடர்ந்து அதில் இருந்த டிரைவர் உள்பட இரண்டு பேரைப் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் அருகே நல்லூரைச் சேர்ந்த ஆண்டனி என்ற அந்தோணி(34), கோவை கண்ணப்பநகரைச் சேர்ந்த அருண்(26) என்பதும்,
இவர்கள் கோவையில் இருந்து கேரளாவுக்கு சரக்கு லாரியில் 3½ டன் ரேஷன் அரிசியைக் கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இரண்டு பேரையும் போலீஸார் கைது செய்து, 3½ டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனர்.