கோவை: கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் முகமூடி அணிந்து வந்த மர்ம வாலிபர்கள் கதவைத் தட்டி 11 பவுன் நகையைப் பறித்துச் சென்று கைவரிசை காட்டியுள்ளனர்.

கோவை போத்தனூரில் மூதாட்டியைத் தாக்கி 11 பவுன் நகையை பறித்துச் சென்ற முகமூடி அணிந்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- ‘‘கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ள என்.பி. இட்டேரி காசி நகரைச் சேர்ந்தவர் பகுருதீன் 75, இவருடைய மனைவி ஜகாரா 66, இவர்களுக்கு நான்கு மகன்கள் 4 மகன்கள் உள்ளனர். அனைவரும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனால் பகுருதீன் ஜகாரா தனியாக வசித்து வந்தனர்.
அவர்கள் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் வீட்டின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. உடனே எழுந்து கதவைத் திறந்தார். அப்போது வீட்டின் வாசலில் முகமூடி அணிந்தபடி 2 வாலிபர்கள் நின்றனர். அவர்கள் திடீரென ஜகாராவைத் தாக்கி கீழே தள்ளிவிட்டு அவரது கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். அப்பகுதியில் உள்ள அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மர்ம நபர்களைப் பிடிக்க முயன்றனர். ஆனால், அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்தப் புகாரின் பேரில் போத்தனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நகையைப் பறித்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.