கோவை: குட்கா மற்றும் புகையிலை விற்பனை செய்தால் கடைக்கு சீல் வைக்கப்பட்டு, கைது செய்யப்படுவீர்கள் என வியாபாரிகளை அழைத்து காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவை காந்திபுரம் காவல் நிலையம் சார்பாக கோவை காந்திபுரத்தில் சுற்றியுள்ள அனைத்து வியாபாரிகளையும் அழைத்து தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை கடைகளில் வைத்து விற்பனை செய்தால் அவை சோதனை செய்து கண்டுபிடிக்கப்பட்டால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர்.

கோவை காந்திபுரம் ராம் நகர் பகுதியில் உள்ள அசோகா பிரேமா கல்யாண மண்டபத்தில் கோவை மாநகர காவல் ஆணையாளர் மற்றும் துணை ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் காந்திபுரம் பகுதி சில்லறை வியாபாரிகள் மற்றும் மொத்த வியாபாரிகளை அழைத்து குட்கா விற்பனை முழுவதும் தடை விதிக்கப்பட்டது.

இது சம்பந்தமாக மத்திய சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் சதீஷ் குமார் தலைமையில் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சிவானந்தா காலனி கிளை தலைவர் தீனதயாளன் மற்றும் சி1 காட்டூர் காவல் ஆய்வாளர் லதா உதவி ஆய்வாளர் வெள்ளி ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குட்கா விற்பதால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் மேலும் தடை விதிக்கப்பட்ட குட்கா விற்றால், காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகள் பற்றியும் சம்பந்தப்பட்ட துறையின் மூலம் கடை சீல் வைக்கப்படும் என்பதனையும் காந்திபுரம் பகுதி வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.