மாடு வளர்ப்போரின் நலனை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 உயர்த்த வேண்டும் - வானதி சீனிவாசன்

கோவை: பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தித் தர வேண்டும் என்று கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எலஏ வானதி சீனிவாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தித் தர வேண்டும் என்று கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எலஏ வானதி சீனிவாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ-வான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘‘கடந்த மே 7-ஆம் தேதி தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்படும் என்று அறிவித்தார். இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், இதனை பா.ஜ.க சார்பில் வரவேற்றோம்.

ஆனால், தமிழக அரசின் இந்த முடிவு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ. 3 குறைத்த தமிழக அரசு, கொள்முதல் விலையை அதே அளவுக்கு அதாவது லிட்டருக்கு ரூ. 3 அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாததால் பால் உற்பத்தியாளர்களான கறவை மாடுகள் வளர்க்கும் ஏழை விவசாயிகளும், விவசாய நிலங்களற்ற கூலித் தொழிலாளர்களும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆவின் பால் விற்பனை விலை குறைக்கப்பட்டதும், தனியார் பால் நிறுவனங்களும் விலையைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விற்பனை விலை குறைந்ததால் தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலையையும் ஓசையின்றி குறைத்துவிட்டன. அதிகாரப்பூர்வமாக இந்த விலை குறைப்பு அறிவிக்கப் படாவிட்டாலும் மாடு வளர்ப்போருக்கு முந்தைய விலை கிடைப்பதில்லை. பல தனியார் நிறுவனங்கள் மாடு வளர்ப்போருக்கு பல மாதங்கள் பணம் தராமல் நிலுவையில் வைத்துள்ளன.

இது ஒரு புறம் என்றால், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மூலம் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் மாடு வளர்ப்போருக்கும் கொள்முதல் பணம் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி மாடுகள் வளர்க்கும் அடித்தட்டு மக்கள் கொண்டு வரும் பால் முழுவதையும் கூட்டுறவு சங்கங்கள் பெற்றுக் கொள்வதில்லை. இதனால் பாலை விற்க முடியாமல் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது.

எனவே, கிராமங்களில் மாடுகள் வளர்த்து அதனை மட்டுமே நம்பி வாழ்க்கையை நடத்தி வரும் அடித்தட்டு மக்களின் நலன் கருதி பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 3 அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் மாடுகள் வளர்ப்போரின் கோபத்திற்கு திமுக அரசு ஆளாக நேரிடும்'' என்று அந்த அறிக்கையில் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...