களத்தில் இறங்கி கலக்கும் அறநிலையத்துறை... திருப்பூரில் பல்வேறு கோவில்களில் அமைச்சர் ஆய்வு!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி திருக்கோயில், வீரராகவ பெருமாள் திருக்கோயில், விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோயில் ஆகியவற்றில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

தமிழகத்தில் ஆகம விதிப்படி 12 ஆண்டுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தப்பட வேண்டிய நிலையில், இந்த பணிகளில் தொய்வு அடைந்துள்ள கோவில்களில் ஆய்வு மேற்கொண்டு அவற்றை விரைந்து நடத்த நடவடிக்கை மேற்கொள்ளவும், கோவில்களில் பணிபுரியும் ஊழியர்கள் அர்ச்சகர்கள் ஆகியோர் நேரில் சந்தித்து அவர்கள் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகளை உடனடியாக கேட்கவும் ஆய்வு பணி மேற்கொள்ள படுவதாகவும் தெரிவித்தார்.



தமிழகத்தை பொறுத்தவரை திருக்கோயில்கள் தூய்மை நிறைந்த நந்தவனங்களாகவும், தெப்பக்குளங்கள் தெப்பம் விடும் அளவிற்கு மேம்படுத்தவும் , திருத்தேர்களைச் செப்பனிடவும் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், வருமானம் உள்ள கோவில்கள் வருமானம் இல்லாத கோயில்கள் என பாகுபாடு இல்லாமல் அனைத்து கோவில்களிலும் ஆகம விதிப்படி ஒரு கால பூஜையாவது நடைபெற வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்த உள்ளதாகவும் தெரிவித்தார்.



இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் குடமுழுக்கு விழாக்கள் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், இந்த தலைமுறை திமுக ஆட்சி ஆன்மிக மக்களுக்கு பொற்கால ஆட்சியாக அமைந்திருக்கும் எனவும், கோவில் நிலங்கள் இதுவரை இல்லாத அளவு ஆக்கிரமிப்பு களிலிருந்து அதிக அளவு மீட்கப் பட்டிருப்பதாகவும், கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் யாரானாலும் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதன் அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும், 100 நாட்களில் அவை முழுமை அடையும் தற்போது படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மாவட்ட ஆட்சியர் வினீத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...