வால்பாறையில் தமிழக ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தொழில் பயிற்சி முகாம்!

கோவை: வால்பாறையில் தமிழக ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தொழில் பயிற்சி முகாம் நடைபெற்றது.


கோவை: வால்பாறையில் தமிழக ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தொழில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி சார்பாக அம்மா மாளிகை கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கு.சமீரன் அவர்களின் ஆணைப்படி மகளிர் சுய உதவி குழுவினருக்கு தொழிற்பயிற்சி ஆலோசனை கூட்டம் நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் தலைமையிலும், துணை ஆட்சியர் ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது.



இதில் வால்பாறை பகுதியில் இயங்கி வருகின்ற சுமார் 60க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு குழுவுக்கும் 12 அல்லது 15 பேர் கொண்ட குழுவாக ஆரம்பிக்கப்பட்டு அதில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் பற்றியும், தேனீர் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, இனிப்பு வகைகள் தயாரித்தல், தொழில் பயிற்சியான கூடை பின்னுதல், தையல், கேண்டில், சாக்லேட் தயாரித்தல் போன்ற கைவினைப் பொருள்களை தயாரிப்பதற்கு அரசாங்கம் சுய உதவி குழுவிற்கு நிதி உதவி வழங்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டி கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட துணை ஆட்சியர் ரமேஷ்குமார், மகளிர் திட்ட வளர்ச்சி வல்லுநர் கோமதி, வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார், சமுதாய ஒருங்கிணைப்பாளர் வாசுகி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...