கோவையில் தூய்மைப்பணியாளர்கள்‌ மற்றும்‌ முன்‌ களப்பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு!

கோவை: கோவையில் தூய்மைப்பணியாளர்கள்‌ மற்றும்‌ முன்‌ களப்பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜகோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில்‌ தூய்மைப்பணியாளர்கள்‌ மற்றும்‌ முன்‌ களப்பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜகோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூய்மைப்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ களப்பணியாளர்கள்‌ தங்களது பணிகளை மிகச்சிறப்பாக மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொசுவினால்‌ ஏற்படும்‌ நோய்களை தவிர்க்க முன்‌ களப்பணியாளர்கள்‌ பொதுமக்களிடம்‌ போதிய விழிப்புண்வை ஏற்படுத்திட வேண்டும்‌.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில்‌ தூய்மைப்பணியாளர்கள்‌ மற்றும்‌ முன்‌ களப்பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜகோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌ 65க்குட்பட்ட செளரிபாளையம்‌ சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌ அவர்கள்‌, அவ்வலுவலகத்தில்‌ தூய்மைப்பணியாளர்களின்‌ வருகைப்‌ பதிவேடுகள்‌ குறித்து ஆய்வு செய்த பின்னா்‌, தூய்மைப்பணியாளர்களிடம்‌ தெரிவிக்கையில்‌, தூய்மைப்பணியாளார்கள்‌ நேரம்‌ தவறாமல்‌ பணிக்கு வருகை தர வேண்டும்‌.

மேலும், குப்பைகளை சேகரிக்கும்‌ போது மக்கும்‌ குப்பை, மக்காத குப்பை என தரம்‌ பிரித்து சேகரிக்க வேண்டும்‌. தூய்மையான மாநகராட்சியாக திகழ தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்திட வேண்டும்‌. மழைநீர் வடிகால்‌ கால்வாய்களில்‌ அடைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி நீர் தேங்காமல்‌ செல்லும்‌ வகையில்‌ கால்வாயினை சுத்தப்படுத்திட வேண்டும்‌.

தூய்மைப்பணியாளர்கள்‌ அனைவரும்‌ முகக்கவசம்‌ அணிந்து பணியாற்ற வேண்டும்‌. கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திட வேண்டும்‌. அனைவரும்‌ தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்‌ என அறிவுரைகள்‌ வழங்கிய பின்னர்‌, பொதுமக்கள்‌ சாலையோரங்களில்‌ பொது இடங்களில்‌ குப்பைகளைக்‌ கொட்டக்‌ கூடாது, குப்பைத்‌ தொட்டிகளில்‌ மட்டுமே கொட்ட வேண்டும்‌ என தெரிவித்தார்கள்‌.



தொடா்ந்து, கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.64க்குட்பட்ட உப்பிலிபாளையம்‌ சுகாதார ஆய்வாளர்‌ அலுவலக வளாகத்தில்‌ கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும்‌ முன்களப்பணியாளர்களிடம்‌ ஆணையாளர்‌ அவர்கள்‌ தெரிவிக்கையில்‌, முன்‌ களப்பணியாளார்கள்‌, வீடு வீடாகச்‌ சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல்‌, இருமல்‌, மூச்சுத்தினறல்‌, உடல்‌ சோர்வு, உடல்‌ வெப்பநிலை பரிசோதனை, ஆக்சிஜன்‌ அளவு ஆகிய பணிகளை கண்டறியும்போது, அதன்‌ விபரங்களை கோவிட்‌-19 களஆய்வு பதிவேடுகளில்‌ பதிவு செய்திட வேண்டும்‌.

மேலும், சளி, காய்ச்சல்‌ உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில்‌ அவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டால்‌, உடனடியாக கொரோனா கட்டுப்பாட்டறை மற்றும்‌ சுகாதார அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும்‌. பணி மேற்கொள்ளும்போது முகக்கவசம்‌ அணிந்து பணியாற்ற வேண்டும்‌, கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டும்‌, தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.

பின்னர், முன்களப்பணியாளார்கள்‌ பொதுமக்களிடம்‌ கொசுவினால்‌ ஏற்படும்‌ நோய்களை தடுப்பதற்காக வீடுகளில்‌ தேவையற்ற உடைந்த பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌, டயர்‌, தேங்காய்‌ சிரட்டைகள்‌, உடைந்த குடங்கள்‌, உபயோகமற்ற பொருட்கள்‌, உடைந்த சிமென்ட்‌ தொட்டிகள்‌ முதலியவற்றை அகற்ற வேண்டும்‌ என தெரிவிக்க வேண்டும்‌.

இதனையடுத்து, வீட்டில்‌ உள்ள தண்ணீர் தொட்டிகளை கொசுக்கள்‌ மற்றும்‌ கொசுப்புழு புகாவண்ணம்‌ மூடி வைக்க வேண்டும்‌. கழிப்பறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்‌. தண்ணீர் நிரம்பிய பூ ஜாடி, குளிர்சாதனப்பெட்டியின்‌ கீழ்‌ தட்டு, மணி பிளான்ட்‌ ஆகியவற்றில்‌ தேங்கியுள்ள தண்ணீரை மூன்று நாட்களுக்கொருமுறை அகற்றிட வேண்டும்‌. கொசுவினால்‌ ஏற்படும்‌ நோய்களைக்‌ குறித்து பொதுமக்களிடம்‌ விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டும்‌ என தெரிவித்தார்கள்‌.

இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டல உதவி ஆணையாளர்‌ ரங்கராஜன்‌, சுகாதார ஆய்வாளர்‌ ராஜேந்திரன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...