கோவை ஈஷாவின் 'புராஜக்ட்‌ சம்ஸ்க்ரிதி‌' -மாணவர்கள் பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்வார்கள்–சத்குரு பேச்சு

கோவை: ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர்கள்‌ இந்தியப் பாரம்பரிய கலைகளை உலகம்‌ முழுவதும்‌ கொண்டு செல்வார்கள்‌ என குரு பௌர்ணமி விழாவில்‌ சத்குரு தெரிவித்தார்.


கோவை: ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர்கள்‌ இந்தியப் பாரம்பரிய கலைகளை உலகம்‌ முழுவதும்‌ கொண்டு செல்வார்கள்‌ என குரு பௌர்ணமி விழாவில்‌ சத்குரு தெரிவித்தார்.

'புராஜக்ட்‌ சம்ஸ்க்ரிதி‌' என்ற இட்டத்தின்‌ மூலம்‌ ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர்கள்‌ இந்தியப் பாரம்பரிய இசை மற்றும்‌ நடனக் கலைகளையும்‌, தற்காப்புக் கலையான களரியையும்‌ உலகம்‌ முழுவதும்‌ கொண்டு செல்வார்கள்‌ என ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு தெரிவித்தார்‌.

ஆதியோகியான சிவன்‌ முதல்‌ முறையாகச் சப்த ரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பகிர்ந்துகொண்ட தினம்‌ குரு பெளர்ணமி ஆகக் கொண்டாடப்படுகிறது. இந்தப்‌ புனித நாளில்‌ தான்‌ அவர்‌ உலகின்‌ ஆதிகுருவாக உருவெடுத்தார்‌. இதன்‌ காரணமாக இந்நாள்‌ ஆன்மீக ரீதியாக மிகுந்த முக்கியத்துவம்‌ வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்தாண்டு குரு பௌர்ணமி நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சத்குருவின்‌ சிறப்பு சத்சங்கம்‌ ஆன்லைன்‌ வாயிலாக நடைபெற்றது.

இதுகுறித்து சத்குரு கூறியதாவது:-



"மனிதர்கள்‌ அமைதியாகவும்‌ ஆனந்தமாகவும்‌ இருப்பதற்கு ஏராளமான சர்க்கஸ்‌ செய்கிறார்கள்‌. துன்பம்‌, இன்பம்‌, கோபம்‌, அமைதி என மனித அனுபவங்கள்‌ அனைத்தும்‌ நமக்குள்‌ இருந்து தான்‌ வருகிறது என்பதை மக்கள்‌ உணராமல்‌ இருக்கிறார்கள்‌.

அதனால்‌, வெளி சூழல்களில்‌ ஏராளமான சர்க்கஸ்களை செய்கிறார்கள்‌. இது எந்த பயனையும்‌ தராது. உள்நோக்கி திரும்பினால்‌ தான்‌ நம்‌ வாழ்க்கை அனுபவங்களை மேம்படுத்த முடியும்‌.

மனிதர்கள்‌ மற்ற உயிரினங்களைப் போல்‌ உணவு, தூக்கம்‌, காமம்‌ போன்ற வெறும்‌ பிழைப்பு சார்ந்த அம்சங்களில்‌ மட்டும்‌ சிக்கி வாழ்வை வீணடித்துவிடக் கூடாது. பிழைப்பைத் தாண்டிய பரிமாணங்களை அவர்கள்‌ அனுபவித்து உணர வேண்டும்‌. இசை, நடனம்‌ போன்றவற்றின்‌ மூலமும்‌ இந்நிலையை நாம்‌ அடைய முடியும்‌.

ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர்கள்‌ பிழைப்பைத் தாண்டிய கலைகளை கற்றுத் தேர்ந்து இருக்கிறார்கள்‌. சிறுவயதிலிருந்தே இசை, நடனம்‌, களரி போன்றவற்றில்‌ தங்கள்‌ வாழ்வை முதலீடு செய்துள்ளார்கள்‌. இதிலேயே ஊறி வளர்ந்து இருக்கிறார்கள்‌. அவர்கள்‌ பொழுது போக்கிற்காக வாரத்தில்‌ 2 மணி நேரம்‌ மட்டும்‌ இதை கற்றுக் கொள்ளவில்லை. 24 மணி நேரமும்‌ இந்த கலைகளுடனே வாழ்ந்து வந்துள்ளார்கள்‌.

அவர்கள்‌ தாங்கள்‌ கற்ற கலைகளை இப்போது மற்றவர்களுக்கும்‌ கற்று கொடுக்க தயாராகிவிட்டார்கள்‌. அதற்காக, 'புராஜக்ட்‌ சம்ஸ்க்ரிதி' என்ற திட்டம்‌ இந்த குரு பெளர்ணமி நாளில்‌ தொடங்கப்பட்டுள்ளது. அவர்கள்‌ இன்னும்‌ சில வாரங்களில்‌ இணைய வழியில்‌ இசை, நடனம்‌, களரி போன்றவற்றைச் சொல்லிக் கொடுக்கும்‌ செயல்களைத் தொடங்க உள்ளார்கள்‌.

பின்னர்‌, உலகின்‌ பல்வேறு நகரங்களில்‌ நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார்கள்‌. இதன்மூலம்‌, அவர்கள்‌ நம்‌ இந்தியப் பாரம்பரிய கலைகளை உலகம்‌ முழுவதும்‌ எடுத்துச் செல்வார்கள்‌.

இவ்வாறு சத்குரு பேசினார்‌.



சத்சங்கத்தின்‌ தொடக்கத்தில்‌ ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர்களின்‌ இசை, நடனம்‌ மற்றும்‌ களரி நிகழ்ச்சி நடைபெற்றது.



Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...