கோவை: கோவையில் கொரோனா ஆய்வு மேற்கொண்ட பெண் ஊழியரை மிரட்டிய ஆட்டோ டிரைவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை ஆவாரம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சௌமியா (22), இவர் கோவை மாநகராட்சி 40வது வார்டு பகுதியில் ஒரு கொரோனா நோய் பரவல் தொடர்பாக தற்காலிக ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், ஆவாரம்பாளையம் தெற்கு வீதியில் உள்ள சுரேஷ் என்ற ஆட்டோ டிரைவர் வீட்டில் கொரோனா குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட சவுமியாவிடம் சுரேஷ் தகராறு செய்து ஜாதி பெயரை கூறி மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.