கொரோனா தொற்று: கோவையில் கைதிகள் உறவினர்களிடம் பேச வீடியோ கால் வசதி - சிறைத்துறை அதிகாரிகள் தகவல்!

கோவை: கோவையில் கொரோனா தொற்று காரணமாக கைதிகள் உறவினர்களிடம் பேச வீடியோ கால் வசதி செய்து தரப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவையில் கொரோனா தொற்று காரணமாக கைதிகள் உறவினர்களிடம் பேச வீடியோ கால் வசதி செய்து தரப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக விசாரணை கைதிகள் தற்போது நேரடியாக கோவை மத்திய சிறையில் அனுமதிக்கப்படுவது இல்லை. கிளை சிறையில் 15 நாள்கள் அடைக்கப்பட்ட பின்னரே, கோவை மத்திய சிறைக்கு மாற்றப்படுகின்றனர்.

மேலும், கொரோனா காரணமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், அவர்களது உறவினர்கள் பார்வையாளர்களை சந்தித்துப் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் மத்திய சிறை அதிகாரிகள் முறையாக முன்பதிவு செய்து செல்போன் வீடியோ கால் மூலமாக தங்களது குடும்பத்தினை தொடர்பு கொண்டு பேசும் திட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் தொடங்கப்பட்டது.

அதன்படி, கோவை சேலம் மத்திய சிறைக்கு 10க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு செல்போன்கள் ஒதுக்கப்பட்டது. அதேசமயம், மாவட்டத்திலுள்ள கிளை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தங்களது உறவினர்களுடன் வீடியோ கால் பேச அனுமதிக்கப்படவில்லை. தற்போது கிளை சிறையிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறும்போது,

மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்கள் https://eprisons.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று அல்லது vibyo என்ற செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்தோ தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை சந்திக்க விரும்பும் கைதியின் பெயர் அடைக்கப்பட்டுள்ள சிறையின் விவரங்களையும் தெரிவித்து விண்ணப்பிக்கலாம், அதிகாரிகள் ஆய்வு செய்து கைதிகள் வீடியோ அழைப்பில் பேசுவதற்கு அவர்களின் உறவினர்களுக்கு லிங்க் அனுப்பப்படும். அந்த லிங்கை கிளிக் செய்து வீடியோ கால் மூலமாக பேசலாம். ஒரு கைதிக்கு வாரத்துக்கு ஒருமுறை அரை மணி நேரம் பேச வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...