கோவையில் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி - மாவட்ட ஆட்சியர் தகவல்!

கோவை: கோவையில் சி.எஸ்.ஆர். நிதி மூலம் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் சி.எஸ்.ஆர். நிதி மூலம் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியை சி.எஸ்.ஆர். பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமை தாங்கினார்.



இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்ரே சுபம், ஞானதேவராவ் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகை வாசன், இணை இயக்குனர் கிருஷ்ணா, உதவி கலெக்டர் பயிற்சி சரண்யா உட்பட பலர் பங்கேற்றனர்,

அப்போது மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியதாவது:-

மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பாதிப்பு எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகத்திலேயே சென்னைக்கு அடுத்து கோவையில் தான் அதிக அளவில் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

இந்நிலையில் சி.எஸ்.ஆர். நிதியை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இலவசமாக தனியார் மருத்துவமனைகள் மூலம் தடுப்பூசிகள் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து தொழில் நிறுவனங்களும் தங்களின் சி.எஸ்.ஆர். நிதியை அளித்து உதவ வேண்டும்.

மேலும், தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி வழங்கப்பட்டால் விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை அடைய முடியும். இதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...