கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிப்பு..!

கோவை: இந்திய விமான நிலையங்கள் ஆணையகம் வெளியிட்டுள்ள விமான நிலையங்களின் மாதாந்திர செயல்பாடு குறித்த அறிவிப்பில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஜூனில் மொத்தம் 29 ஆயிரத்து 42 பயணிகள் பயன்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: இந்திய விமான நிலையங்கள் ஆணையகம் வெளியிட்டுள்ள விமான நிலையங்களின் மாதாந்திர செயல்பாடு குறித்த அறிவிப்பில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஜூனில் மொத்தம் 29 ஆயிரத்து 42 பயணிகள் பயன்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையம் கோவை உட்பட சுற்றுப்புறங்களைச் சேர்ந்த ஏழு மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று முதல் அலை பரவலுக்குப் பின் விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

மீண்டும் சகஜ நிலைமை திரும்புவதற்கு முன் இரண்டாவது அலை நோய்த்தொற்று பரவல் தொடங்கியது. இதனால் மீண்டும் கோவை விமான நிலையத்தில் இயக்கப்படும் விமானங்கள் மற்றும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. மே மாதத்தில் தினமும் 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நிலைமை சற்று மாறி உள்ளது. தினமும் 11 விமானங்கள் சென்னை, பெங்களூரு, மும்பை, டில்லி, பூனே, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. சர்வதேச விமான போக்குவரத்து பிரிவில் கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு ‘ஏர் அரேபியா' நிறுவனம் சர்வீஸ் வழங்கி வருகிறது.

இந்திய விமான நிலையங்கள் ஆணையகம் வெளியிட்டுள்ள விமான நிலையங்களின் மாதாந்திர செயல்பாடு குறித்த அறிவிப்பில், ‘‘கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஜூனில் மொத்தம் 29 ஆயிரத்து 42 பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 28 ஆயிரத்து 53 பேர். சர்வதேச விமான போக்குவரத்து பிரிவில் 539 பேர்'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மாதங்களில் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை மற்றும் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...