நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர்சோலை, தேவன் எஸ்டேட் பகுதியில் குடியிருப்புகள் மற்றும் தேயிலை தோட்டங்களின் அருகே கடந்த இரண்டு நாட்களாகப் புலியின் நடமாட்டம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், மேய்ச்சலுக்கு விடப்பட்ட மூன்று பசுமாடுகளை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி அடித்துக் கொன்றது, அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று நாட்களில், தேவர்சோலையை சேர்ந்த நாராயணன் மற்றும் சுப்பிரமணி என்பவர்களுக்குச் சொந்தமான மூன்று மாடுகளைக் கொன்ற புலி, அங்குள்ள குடியிருப்புகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் நடமாடி வருவதால் கிராம மக்கள் தேயிலை தோட்டத்திற்கு பணிக்குச் செல்லாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். கால்நடைகளை கொன்று வரும் புலியை, உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், வனத்துறையினர் புலியைக் கூண்டு வைத்துப் பிடிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், இறந்த கால்நடைகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம மக்களிடையே தெரிவித்த பின்னரே அவர்கள் சமாதானம் அடைந்தனர்.
இருப்பினும், குடியிருப்பு பகுதிகளில் பதுங்கி இருக்கும் புலியால் அப்பகுதி மக்கள் எஸ்டேட் வேலைக்குச் செல்லமுடியாமல் அச்சமடைந்துள்ளனர். மேலும், இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் யாரும் டார்ச் இல்லாமல் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.