கோவையில் வழங்கப்பட்ட தாய்–சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம்- நெய்‌ மற்றும்‌ பேரீச்சம்பழம்‌ காலாவதி?

கோவை: மாநகராட்சி நகர் நல மையங்களில்‌ சிகிச்சைக்காக வரும்‌ கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் தாய்சேய்‌ நல ஊட்டச்சத்து பெட்டகங்கள்‌ காலாவதியாகி உள்ளதாகத் தெரியவந்ததைத்‌ தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


கோவை: மாநகராட்சி நகர் நல மையங்களில்‌ சிகிச்சைக்காக வரும்‌ கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் தாய்சேய்‌ நல ஊட்டச்சத்து பெட்டகங்கள்‌ காலாவதியாகி உள்ளதாகத் தெரியவந்ததைத்‌ தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கோவை‌ மாநகராட்சியில்‌ செயல்பட்டு வரும்‌ மாநகராட்சி நகர் நல மையங்களில்‌ சிகிச்சைக்காக வரும்‌ கர்ப்பிணி தாய்மார்களுக்குத் துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌ மூலம்‌ தாய்சேய்‌ நல ஊட்டச்சத்து பெட்டகங்கள்‌ பெறப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இதில்‌ தாய்‌ ஊட்டச்சத்து மாவு, இரும்புச்சத்து டானிக்‌, பேரீச்சம்பழம்‌, குடல்‌ புழு மாத்திரை, டீ கப்‌, பருத்தி துண்டு, நெய்‌ மற்றும்‌ பிளாஸ்டிக் கூடை போன்ற 8-வகையான பொருட்கள்‌ உள்ளடங்கியுள்ளது.

அவ்வாறு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து பெட்டக பொருட்களில்‌ நெய்‌ மற்றும்‌ பேரீச்சம்பழம்‌ ஆகிய பொருட்கள்‌ காலாவதியாகி உள்ளதாகத் தெரியவந்ததைத்‌ தொடர்ந்து மாநகர நல அலுவலர் சிங்காநல்லூர்‌ மாநகராட்சி நகர் நல மையத்தில்‌ ஆய்வு மேற்கொண்ட போது மொத்தம்‌ 21- பெட்டகங்கள்‌ வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதில்‌ 20-பெட்டகங்கள்‌ நல்ல நிலையிலும்‌ ஒரு பெட்டகத்தில்‌ மட்டும்‌ நெய்‌ மற்றும்‌ பேரீச்சம்பழம்‌ ஆகிய பொருட்கள்‌ காலாவதியாகி இருந்ததாகத் தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்ட நகர் நல மைய சுகாதார செவிலியர் மற்றும்‌ சுகாதார செவிலியர்‌ ஆகியோரிடம்‌ விளக்கமளிக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, மேற்படி ஊட்டச்சத்து பெட்டகம்‌ மாநகராட்சி நகர் நல மையங்களில்‌ கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும்‌ போது அப்பெட்டகத்தைச் சரிபார்த்து பொருட்களை நல்ல நிலையில்‌ வழங்க அனைத்து நகர் நல மருத்துவ அலுவலர்களுக்கும்‌ அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர் ராஜ கோபால்‌ சுன்கரா ஆகியோர்‌ தெரிவித்துள்ளனர்‌.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...