ரோட்டரி கோயமுத்தூர் சென்ட்ரல் சங்கத்தின் சார்பாக அரசு மருத்துவமனைக்கு வென்டிலேட்டர் நன்கொடை!

கோவை: அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை துறைக்கு ரூ.19 லட்சம் மதிப்பிலான வென்டிலேட்டர்களை ரோட்டரி கோயமுத்தூர் சென்ட்ரல் சங்கத்தின் சார்பாக நன்கொடை வழங்கப்பட்டது.


கோவை: அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை துறைக்கு ரூ.19 லட்சம் மதிப்பிலான வென்டிலேட்டர்களை ரோட்டரி கோயமுத்தூர் சென்ட்ரல் சங்கத்தின் சார்பாக நன்கொடை வழங்கப்பட்டது.

கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை துறைக்கு ரூ.19 லட்சம் மதிப்பிலான வென்டிலேட்டர்களை ரோட்டரி கோயமுத்தூர் சென்ட்ரல் சங்கத்தின் சார்பாக 22.7.2021 அன்று வழங்கப்பட்டது.



ரோட்டரி சங்கத்தின் தலைவர் என். சுப்ரமணியம் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி. எஸ் சமீரன் முன்னிலையில் அரசு மருத்துவமனையின் டீன் ஏ. நிர்மலாவிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ரோட்டரி கோயமுத்தூர் சென்ட்ரல் சங்கத்தின் ஆர்.வி. ரமணி, ரோட்டரி கவர்னர் எஸ். ராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

கனடாவைச் சேர்ந்த வெஸ்ட் கேர் மெடிக்கல் நிறுவனம் இந்த கருவிகளை வழங்க முன்வந்தது. அதனை கனடாவைச் சேர்ந்த சுரேஷ் ஐயர்மற்றும் ரோட்டரி கோயமுத்தூர் சென்டரல் இணைந்து பணியாற்றி அரசு மருத்துவமனைக்கு வழங்கி உதவினர்.

இதுகுறித்து ரோட்டரி சங்கத் தலைவர் என். சுப்ரமணியம் கூறியதாவது:-

"இந்த பெருந்தொற்றுக் காலத்தில் சாமானிய மக்களுக்கு உதவுவதற்கு ரோட்டரி சங்கம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த முயற்சியின் கீழ் இன்று இந்த வென்டிலேட்டர்களை வழங்கியுள்ளது.

மிகச் சிறய அளவில் உள்ள இந்த அதிநவீன வென்டிலேட்டர்களை அறுவை சிகிச்சை தியேட்டர்களிலிருந்து வார்டுக்கும் வார்டிலிருந்து அறுவை சிகிச்சை தியேட்டருக்கும் மிகவும் எளிதாக எடுத்துச் செல்லலாம்".

இவ்வாறு ரோட்டரி சங்கத் தலைவர் என். சுப்ரமணியம் தெரிவித்தார்.

இதுகுறித்து ரோட்டரி கவர்னர் எஸ். ராஜசேகர் கூறியதாவது:-

"அரசு மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள ரோட்டரி சங்கங்கள் பல்வேறு கருவிகளையும் உபகரணங்களையும் கொடுத்து உதவி வருகின்றன." என்று ரோட்டரி கவர்னர் எஸ். ராஜசேகர் தெரிவித்தார்.

இதனையடுத்து, அரசு மருத்துவமனையின் டீன் ஏ. நிர்மலா ரோட்டரி சங்கத்திற்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...