கோவை: தமிழக அரசு உத்தரவுப்படி அரசு பஸ்களில் கடந்த மே 7-ஆம் தேதி முதல் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர்.
கோவை: தமிழக அரசு உத்தரவுப்படி அரசு பஸ்களில் கடந்த மே 7-ஆம் தேதி முதல் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர்.
சொகுசு பஸ் எனப்படும் சிவப்பு நிற பஸ்களில் இலவச பயணம் இல்லை. சாதாரண கட்டண மாநகர பஸ்களில் மட்டுமே பெண்கள் இலவசமாகப் பயணிக்க முடியும்.
கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் இலவசமாக பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக் கொள்ளும் வகையில் கடந்த 12-ஆம் தேதி முதல் பெண்களுக்கு கட்டணமில்லா பயணச் சீட்டு வழங்கப்படுகிறது. கோவை மண்டலத்தில் உள்ளூர் வெளியூர் என 17 பணிமனைகளில் 1012 பஸ்கள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தற்போது 772 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் 300 சாதாரண பஸ்கள் ஆகும். மாநகர பஸ்களில் இலவசமாக பெண்கள் மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் என தினமும் 1.50 முதல் 1.60 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறும்போது:- ‘‘தற்போது இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை 572 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் 300 சாதாரண பஸ்களும் அடங்கும். கோவை மண்டலத்தில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணச் சீட்டு வழங்கப்படுகிறது. அதன்படி கடந்த 11 நாளில் 17.6 லட்சம் பெண்கள் இலவசமாகப் பயணித்துள்ளனர். பயணிகள் தேவையைப் பொறுத்து அரசு வழிகாட்டுதலின்படி பஸ்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும்'' என அதிகாரிகள் கூறினர்.