தென்மேற்கு பருவ மழையால் வால்பாறை சோலையார் அணை அதன் முழு கொள்ளளவு 160 அடியை தொட்டது

கோவை: வால்பாறையில் பெய்து வரும் கன மழையால் சோலையார் அணை அதன் முழு கொள்ளளவு ஆன 160 அடியை எட்டியது.


கோவை: வால்பாறையில் பெய்து வரும் கன மழையால் சோலையார் அணை அதன் முழு கொள்ளளவு ஆன 160 அடியை எட்டியது.

கோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழையால் சோலையாறு அணை நிரம்பியது. அதன் உபரிநீர்சேடல்டேம் வழியாகவும் பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது. பிஏபி திட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தாண்டு கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவ மழையால், மேல்நீராறு, கீழ் நீராறு, சோலையாறு அணைப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பிஏபி திட்ட வால்பாறையில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.



மேல்நீராறு மற்றும் கீழ்நீராறு அணைகளிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் சோலையாறு அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக வேகமாக உயரத் தொடங்கியது. இன்று மதியம் 160 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்ததால் உபரி நீர் சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு விநாடிக்கு 867 கன அடி திறந்து விடப்பட்டது.



நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6725 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1692 கன அடியாகவும் இருந்தது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, 165 அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்தால் அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படும்.

வால்பாறை பகுதியில் பெய்து வரும் தென்மேற்குப் பருவமழையால் இந்தாண்டு பிஏபி பாசனத் திட்டத்திலுள்ள அனைத்து அணைகளும் நிரம்பி, பாசனத்துக்குத் தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...