கோவையில் அரசு பஸ் டயர் வெடித்து பஞ்சர் கடைக்காரர், மற்றொரு விபத்தில் கிரைண்டர் கம்பெனி உரிமையாளர் இருவர் பலி..!

கோவை: கோவையில் அரசு பேருந்தின் டயர் வெடித்து மோட்டார் சைக்கிளில் சென்ற பஞ்சர் கடைக்காரர் மற்றும் இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த கிரைண்டர் கம்பெனி உரிமையாளர் என இருவேறு விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக பலியாகினர்.


கோவை: கோவையில் அரசு பேருந்தின் டயர் வெடித்து மோட்டார் சைக்கிளில் சென்ற பஞ்சர் கடைக்காரர் மற்றும் இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த கிரைண்டர் கம்பெனி உரிமையாளர் என இருவேறு விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக பலியாகினர்.

கோவையில் நடந்த இருவேறு விபத்துகளில் இருவர் பலியானது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, ‘‘கோவை மாவட்டம் சூலூர் அருகே காமாட்சி புரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் வயது 49, திருமணமாகி இவருக்கு ஒரு மகள் உள்ளார். இவர் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் பகுதியில் பஞ்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று மதியம் உணவு உண்பதற்காக மோட்டார் சைக்கிளில் பள்ளபாளையம் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது சிங்காநல்லூர் காவல் நிலையம் எதிரே உள்ள சிக்னலில் இருந்து இடதுகைப் பக்கம் திரும்பினார். அப்போது பின்னால் வந்த கோவையில் இருந்து சிவகாசிக்கு செல்லக்கூடிய அரசுப் பேருந்து அவரது கோட்டார் சைக்கிளின் பின்பக்கத்தில் மோதியது. இதைத்தொடர்ந்து பஸ்சின் டயர் வெடித்தது. இதில் சக்கரத்தில் சிக்கி பஞ்சர் கடைக்காரர் இழுத்துச் செல்லப்பட்டார். இதில் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிங்காநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு டிவைடரை திடீரென்று அகற்றிய காரணத்தினால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக குற்றம்சாட்டினர்.

இதேபோல கோவை கணபதி அருகே ராஜா நகரைச் சேர்ந்தவர் சுந்தரம் வயது 62, இவர் அந்தப் பகுதியில் கிரைண்டர் கம்பெனி நடத்தி வருகிறார். நேற்று அவர் மோட்டார் சைக்கிளில் அத்திப்பாளையம் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகக் கூறினர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்'' என்றனர். இருவேறு விபத்துகளில் இருவர் உயிரிழந்த இரண்டு சம்பவங்களும் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...