ஆலயங்களை திறக்க அனுமதி மறுக்கும் தமிழக அரசை வன்மையாக கண்டிப்பதாக கோவை இந்து முன்னணி அறிக்கை!

கோவை: ஆடி தபசு உட்பட முக்கிய இந்துக்கள் நிகழ்வுகளில் ஆலயங்கள் திறக்க அனுமதி மறுக்கும் தமிழக அரசை வன்மையாகக் கண்டிப்பதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


கோவை: ஆடி தபசு உட்பட முக்கிய இந்துக்கள் நிகழ்வுகளில் ஆலயங்கள் திறக்க அனுமதி மறுக்கும் தமிழக அரசை வன்மையாகக் கண்டிப்பதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதுகுறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"ஆடி மாதம் இந்துக்களின் ஆன்மீக வழக்கங்களில் மிக முக்கியமான மாதம். ஆடி மாதம் தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் குறிப்பாக அம்மன் ஆலயங்களில் கூழ் ஊற்றுவது உட்பட பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அதேபோல் 'சிவனும், விஷ்ணுவும் ஒன்று' என்ற ஒப்பற்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் ஆடித்தபசு திருவிழாவும் தென்காசி சங்கர நாராயணன் கோவில் உட்படப் பல கோவில்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த அனைத்து விழாக்களும் ஆன்மீகத்துடன் அறிவியலும் சம்பந்தப்பட்டது. ஆடி மாதம் காற்றுக் காலம் என்பதால் கிருமிகள் அதிகம் பரவும் என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் அம்மன் வழிபாடு மூலமாக வேப்பிலை, மஞ்சள் ஆகிய கிருமி நாசினிகளைப் பயன்படுத்தி மக்கள் பாதிப்படையாமல் இருப்பதற்கான வழிமுறைகளைக் கையாண்டனர்.

ஆனால் தற்போது எந்தப் பண்டிகைகளையும் கொண்டாட அனுமதி கொடுக்காமல் அரசு முட்டுக்கட்டை போடுகிறது. சில மாவட்டங்களில் ஆட்சியர்கள் கூழ் ஊற்றக்கூடாது எனவும், ஆடித் தபசு கொண்டாடக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

இது போன்ற ஆன்மீகத் திருவிழாக்கள் தான் மக்களின் மனதில் நோய் பற்றிய பயத்தைப் போக்கி நம்பிக்கை ஏற்படுத்தி அவர்கள் வாழ்வாதாரத்தையும் காக்கும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

இவற்றையெல்லாம் அரசு மறுப்பது மிகுந்த சந்தேகத்தை எழுப்புகிறது. கூட்டம் கூடி தொழுகை செய்யும் பக்ரீத் பண்டிகை போக்குவரத்து நிறைந்த நட்ட நடு சாலைகளில் நடந்துள்ளது. பல பத்திரிகைகளில் செய்தியும் வந்துள்ளது.

இவற்றுக்கு அனுமதி கொடுக்கும் அரசு, வரிசையில் தனித் தனியாகச் சென்று சாமி கும்பிடுவதற்குக் கோவிலைத் திறக்க கொரோனாவை காரணம் காட்டி மறுப்பதுபாரபட்சமான செயல். அரசின் இந்த போக்கு இந்துக்களுக்கு விரோதமானதாக மக்கள் கருதக்கூடிய வகையில் உள்ளது.

இந்தச் செயலை இந்து முன்னணி பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. மதச்சார்பற்ற அரசு என்று கூறிக்கொள்ளும் திமுக அரசு உண்மையான மதச்சார்பின்மையை கடைப்பிடிக்கிறது என்றால் இந்து ஆலயங்களில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்க வேண்டும்.

இல்லையெனில் மக்களின் மிகுந்த வெறுப்பைச் சம்பாதிக்க நேரிடும் என்று இந்து முன்னணி எச்சரிக்கிறது."

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...