கோவை வடவள்ளி பகுதியில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் பெண் தூய்மைப் பணியாளர் பிணம்; போலீசார் விசாரணை

கோவை: கோவை, வடவள்ளி, கருப்பராயன் வீதியில் வசித்து வந்த 40 வயதுடைய பெண் தூய்மை பணியாளரின் பிணம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது, அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை, வடவள்ளி, கருப்பராயன் வீதியில் வசித்து வந்த 40 வயதுடைய பெண் தூய்மை பணியாளரின் பிணம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது, அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நித்யா (40) என்ற பெண் கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கணவனை இழந்து அவர், அவரது உறவினரான செந்தில்குமார் என்பவருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று முன்தினம் நித்யா உடைய செல்போனுக்கு அவருடைய சகோதரர் அழைத்து போது, அவர் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்து அவர் வீட்டுக்கு வந்துள்ளார்.

பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டை திறந்து பார்த்த போது, அழுகிய நிலையில் நித்யா சடலமாகக் கிடந்துள்ளார். இதுகுறித்து, தகவல் அறிந்த வடவள்ளி போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், கடந்த 21ஆம் தேதி செந்தில்குமார், உக்கடம் காவல் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட பகுதியில் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு இறந்து போனதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆதலால், செந்தில்குமாரின் இறப்புக்கும் நித்யாவின் சாவுக்கும் தொடர்பு உள்ளதா ? என்று பல்வேறு கோணத்தில் வடவள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...