கோவை: வானிலை மைய எச்சரிக்கையயின்படி, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.
கோவை: வானிலை மைய எச்சரிக்கையயின்படி, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளான சிறுவாணி மற்றும் பில்லூர் அணை பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று கோவைக்குப் பேரிடர் மீட்புப் படையினர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வந்து சேர்ந்தனர்.
பில்லூர் அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் வரத்து
கடந்த சில நாட்களாகவே, பில்லூர் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், பில்லூர் அணை முழு கொள்ளளவான 100 அடியை எட்டும் தறுவாயில் உள்ளது. இன்றைய காலை நிலரப்படி, வினாடிக்கு பில்லூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக உள்ளதால், வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. பில்லூர் அணையிலிருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி நீர், பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், பவானி கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையானது மாவட்ட நிர்வாகம் சார்பாக விடுக்கப்பட்டுள்ளது.
கோவைக்கு விரைந்த பேரிடர் மீட்புக் குழுவினர்
பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மேலாண்மை மையத்திலிருந்து 45 கொண்ட பேரிடர் மீட்பு வீரர்கள் கோவைக்கு வந்து சேர்ந்துள்ளனர்.