பொள்ளாச்சி அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்புகளை கட்டித் தரக்கோரி அனைத்துக் கட்சியினர் வனத்துறை அலுவலகத்தில் முற்றுகை..!

கோவை: பொள்ளாச்சி அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகளை கட்டித் தரக்கோரி அனைத்துக் கட்சியினர் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகளை கட்டித் தரக்கோரி அனைத்துக் கட்சியினர் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வால்பாறை பகுதியில் பெய்த கன மனழ காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் கல்லார்குடி காடர் கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேபோல், சின்னக்கல்லார் பகுதியிலுள்ள குடியிருப்புகளும் சேதமடைந்தன. இதனையடுத்து, குடிசைகளை அகற்றிய வனத்துறையினர் 23 குடும்பங்களை தாய்முடி தனியார் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பில் தங்க வைத்துள்ளனர்.



தற்போது, ஓர் ஆண்டுக்கு மேலாக மாற்று இடம் கிடைக்காமல் தற்காலிகக் குடியிருப்பில் வசிக்கின்றனர். கல்லார்குடி கிராமத்தில் மழைக்காலத்தில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், தெப்பக்குளமேடு பகுதியில் மாற்று இடம் கேட்டு பழங்குடியின மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததால், இன்று பொள்ளாச்சியில் உள்ள மதிமுக, கம்யூனிஸ்ட், உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.



கல்லார் குடியிருப்பு பகுதி மக்களுக்கு மாற்று இடம் வழங்க தேசிய புலிகள் ஆணையத்திற்கு கருத்துரு அனுப்பி உள்ளதாகவும் அதுகுறித்து பதில் கிடைத்ததும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...